தற்காலிக சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு
சிவகங்கை,செப்.11- சிவகங்கை மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வா தார இயக்கத்தின் கீழ் சமுதாய அமைப்பாளர் (Community Organiser) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது. தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தேவகோட்டை நகராட்சி மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் சமுதாய அமைப்பாளர் பணியில் 2 இடங்கள் காலியாக உள்ளன. சமுதாய அமைப்பாளர் பணியிடத்திற்கு தேவகோட்டை நகராட்சி மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சி பகுதிகளைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரர் 35 வயதுக்குட்பட்டவராகவும், ஏதேனும் ஒரு பட்டபடிப்பு (Graduate in any discipline) தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.(MS Office), தகவல் தொடர்பு திறன் மிக்கவராகவும் (Good Communication skill), அரசு திட்டங்களில் குறைந்தபட்சம் ஒருவருடம் முன் அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி, விண்ணப்பதாரர் அவசியம் பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினராகவும், விண்ணப்ப தாரர் உறுப்பினராக உள்ள பகுதி அளவிலான கூட்ட மைப்பிலிருந்து பரிந்துரை கடிதம் அல்லது தீர்மான நகல் பெற்று சமர்ப்பித்தல் வேண்டும்.இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்திருத்தல் வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் சார்ந்துள்ள பகுதி அளவி லான கூட்டமைப்பு அமைக்கப்பட்டதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளாக மாவட்டத்தில் குடியிருப்பவரா கவும், விண்ணப்பதாரர் TNSRLM/PudhuVaazhvu Project /IFAD project ஆகிய திட்டங்களில் நிர்வாகம் அல்லது நிதிமுறைகேடு காரணமாக நிறுத்தப்பட்டவராகவோ/நீக்கம் செய்யப்பட்டவராகவோ இருத்தல் கூடாது. இப் பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானதாகும். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள தகுதி மற்றும் விருப்ப முடைய விண்ணப்பதாரர்கள் வருகின்ற 17.09.2024 அன்று மாலை 5 மணிக்குள் மேலாளர், சிவகங்கை நகர்புர வாழ்வாதார மையம் (CLC) சிவகங்கை நகராட்சி என்ற முக வரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சுய விபரம் அடங்கிய ஆவண நகல்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள் ளார்.
இராமநாதபுரம் : தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை
இராமநாதபுரம், செப்.11- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 500 பிளாட் பகுதியில் குடியிருந்து வந்த பாண்டிச்சேரியை சேர்ந்த சுபாஷ் (25) என்பவருக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா (19) என்பவருக்கும் 8 மாதங்களுக்கு முன்பு திரு மணம் நடைபெற்றது. திருமணம் முடித்து ஐஸ்வர்யாவை கீழக்கரைக்கு அழைத்து வந்தார் சுபாஷ். அவர் கீழக்கரை ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். ஹோட்டல் முதலாளி வீட்டின் மேல் மாடியில் சுபாஷும் அவரது மனைவி ஐஸ்வர்யா வும் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் சுபாஷ் எப்போ தும் போல காலையில் ஹோட்டலுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அதை போல் முதலாளி வீட்டில் உள்ளவர்க ளும் மருத்துவத்திற்காக வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில். முதலாளி தங்கியுள்ள கீழ் வீட்டில் ஐஸ்வர்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலாளியின் மகள் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் போது நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகப்பட்டு ஜன்னல் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது ஐஸ்வர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே அக்கம் பக்கத்தினருக்கும் அவரது கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது உடனே கணவன் வந்து கதவை உடைத்து ஐஸ்வர்யா உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கீழக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.பின்பு திருமணமாகி 8 மாதங் களே ஆனதால் ஐஸ்வர்யா உடலை பிரோத பரிசோத னைக்கு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
ரேசன் கடைகளில் மாவட்ட அதிகாரி ஆய்வு
திருவில்லிபுத்தூர். செப்.11- விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர் நகர் பகுதியில் மங்காபுரம் ரேசன் கடையில் மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா செவ் வாய்க்கிழமையன்று ஆய்வு செய்தார். கடையின் விற்ப னையாளரிடம் பொருட்கள் வழங்குவது குறித்தும் பதிவேடுகள் பராமரிப்பு குறித்தும் ஆய்வு செய்தார். அவரிடம், பாமாயில், துவரம் பருப்பு முழுமையாக வழங்கப்படவில்லை. பல கடைகளில் வழங்காமல் உள்ளது குறித்து தீக்கதிர் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஆகஸ்ட் மாதத்திற்கு வழங்கப்படாத கடைகளுக்கு உடனடியாக வழங்குவதற்கு உத்தரவிட்ட தோடு ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் முழுமையாக வழங்கி விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன் என்று அதிகாரி கூறினார். நகரில் வேறு சில கடை களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பாமாயில், துவரம் பருப்பு திருவில்லி புத்தூர் வட்டாரத்தில் அனைத்து சொசைட்டிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்க ளுக்கு ஒரேமாதிரி வழங்கப் படுகிறது ஆனால் சில கடை களுக்கு மட்டும் தாமதப் படுத்தி வழங்குவதாக ரேசன் கடை ஊழியர்கள் தெரி விக்கின்றனர்.
தேவையான உரங்களை இருப்பு வைத்து முறையாக விநியோகிக்க நடவடிக்கை
இராமநாதபுரம்,செப்.11- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலை வர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: இராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பா லும் டிஏபி உரத்தினையே அடி உரமாக பயன்படுத்துகிறார்கள். டிஏபி உரம் தயா ரிப்புக்கு தேவைப்படும் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை அகில உலகளவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் உள்நாட்டில் டிஏபி உர உற்பத்தி குறைந்து, பெரும்பாலான டிஏபி உரங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இறக்குமதியின்போது, பல் வேறு காரணங்களினால் டிஏபி உரத்தை துறைமுகத்தில் இறக்கி மாவட்டங்களுக்கு அனுப்புவதில் சில சமயங்களில் காலதாம தம் ஏற்படுகிறது. எனவே டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் என்.பி.கே காம்ப்ள க்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த லாம். அவ்வாறு பயன்படுத்தும் போது, பயி ருக்கு தேவையான தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகள் அனைத்தும் என்.பி.கே காம்ப்ளக்ஸ் உரத்திலிருந்து கிடைக்கிறது. சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 16 சதவீதம் பாஸ்பரஸ் சத்துடன் சேர்த்து கூடுதலாக சல்பர் மற்றும் கால்சியம் ஆகிய இரண்டாம் நிலை சத்துக்களும் பயிர்களுக்கு கிடைக் கிறது. மேலும் சூப்பர் பாஸ்பேட் உரம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் அதற்கான விலையும் குறைவாக உள்ளது. சூப்பர் பாஸ்பேட் உரத்தை நிலக்கடலை, எள் மற்றும் சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களில், டிஏபிக்கு மாற்றாக பயன்படுத்தும்போது மகசூல் அதிகரிப்ப துடன் எண்ணெய்ச் சத்தும் அதிகரிக்கிறது. மேலும் கந்தக சத்து எண்ணெய்வித்துப் பயிர்களின் எண்ணெய்ச்சத்தினை அதிக ரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மண்ணில் டிஏபி உரமிடும்போது மண்ணில் ஏற்படுத்தும் உப்பு நிலையை விட சூப்பர் பாஸ்பேட் உரத்தைப் பயன் படுத்தும் போது குறைவாகவே உப்பு நிலை மண்ணில் உண்டாகிறது. அதிக விலைக்கு விற்பனையாகும் டிஏபி உரத்திற்கு மாற்றாக பயிர் சாகுபடிக்கு, சூப்பர் பாஸ்பேட் மற்றும் என்.பி.கே காம்ப்ளக்ஸ் உரங்களை அதிக மாக பயன்படுத்த விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இராமநாதபுரம் மாவட்டத்திற்கு நடப்பு சம்பா பருவத்திற்கு 39,700 மெ.டன் உரங்களை பெற நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயி கள் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை அளவோடு பெற்று பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இன்றைய தேதியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அனைத்து தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா-5100 மெ.டன், டி.ஏ.பி-1495 மெ.டன், பொட்டாஷ்-109 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள்- 2206 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் உரங்கள் 97 மெ.டன் ஆக மொத்தம் 9007 மெ.டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கேற்ப தொடர்ந்து உரங்களை இம்மாவட்டத்திற்கென பெற்று இருப்பு வைத்து முறையாக விநி யோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உரங்களை வாங்கும் போது இரசீதி னை கட்டாயமாக கேட்டுப் பெறுமாறும் உரம் பதுக்கல் அதிக விலைக்கு விற் பனை செய்வது போன்ற புகார்களை தங்கள் பகுதிக்கு அருகாமையிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநரிடம் விவசாயிகள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மனுதாரர்களிடம் செல்போனில் பேசிய அமைச்சர் உதயநிதி
சிவகங்கை,செப்.11- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களையும், அதில் அதிகாரிகள் கூறிய பதிலையும் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதை சரிபார்க்க மனுதார ரிடம் செல்போனில் பேசினார். அப்போது திருப்பத்தூரில் பாம்பு அடைவதாகவும், இதனால் புதரை அகற்றவேண்டுமென ஒருவர் மனு கொடுத்திருந்தார். அதற்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அவற்றை அகற்றி விட்டதாக பதில் கொடுத்திருந்தனர். ஆனால் அந்த மனு தாரரிடம் பேசியபோது, புதர் அகற்றப் படவில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து, அவற்றை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதேபோல், சிவகங்கை பகுதியைச் சேர்ந்த மனுதாரர் ஒருவரிடமும் செல்போனில் பேசி சரிபார்த்தார். பின்னர் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்படும் மனுக்களை தீர்க்கும் அவகாசம் சராசரியாக 36 நாட்களாக உள்ளது. அதை 30 நாட்களாக குறைக்க வேண்டும். மேலும் காரைக்குடி, மானாமதுரை உள்ளிட்ட வட்டங்களில் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்கள் அதிகளவில் நிராகரிக்கப்பட்டது குறித்து அந்தந்த வட்டாட்சியர்களிடம் கேட்டறிந்தார். ஆட்சேபம் உள்ள நிலங்களால் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் நிரா கரிக்கப்பட்டதாக வட்டாட்சியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆட்சேபம் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என பதிவுத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மேலும் முதியோர் ஓய்வூதியம் தொடர்பான மனுக்களில் தகுதியுள்ள மனுக்களை நிராகரிக்காமல் ஏற்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தி னார்.
திருவில்லிபுத்தூர் ஒன்றிய சிபிஎம் கிளை மாநாடுகள்
திருவில்லிபுத்தூர்,செப்.11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டம்,திருவில்லிபுத்தூர் ஒன்றிய பகுதியில் கிளை மாநாடுகள் நடைபெற்றன மம்சாபுரம் மேற்கு கிளைச் செயலாளராக பெருமாள், கிழக்கு கிளைச் செயலாளராக ராஜாராம், பெண்கள் கட்சிக்கிளைச் செயலாளராக முத்துலட்சுமி, மல்லி கிளைச்செயலாளராக ராஜமாணிக்கம், பண்டிதன்பட்டி கிளைச் செயலாளர் சின்னராஜ், சொத்தன்குளம் கிளைச் செயலாளராக பேச்சிராஜ், பழைய செந்நெல்குளம் பெண்கள் கிளைச் செயலாளராக தமிழ்த்தாய், ஆண்கள் கிளை செய லாளராக ராமசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கிளை மாநாடுகளில் கட்சியின் மாவட்ட செயலாளர் கே. அர்ஜுனன், ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் திருமலை, ஜோதிலட்சுமி ஆகி யோர் கலந்து கொண்டனர்.
விளம்பரம் கொடுப்பதில் மதுரை மாநகராட்சி பாரபட்சம்
மதுரை, செப்.11- பத்திரிகைகளுக்கு விளம்பரம் அளிப்பதில் மதுரை மாநகராட்சி பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது. செப்டம்பர் 9 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பல்லாயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உத விகள் மற்றும் பட்டா வழங்கும் அரசு நிகழ்ச்சி யா. ஒத்தக்கடை அருகில் நடைபெற்றது. இதற்கான விளம்ப ரம் மதுரை மாநகராட்சி ஆணையாளர் சா. தினேஷ்குமார், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்தம் ஆகி யோர் பெயரில் மாநகராட்சி சார்பில் அனைத்து பத்திரிகை களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தீக்கதிர் நாளித ழுக்கு மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சாதனைகள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக செய்திகளை தொடர்ந்து தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டு வருகிறது. மக்களின் கோரிக்கைகளையும் உரிய முறையில் அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு செய்தி கள் வாயிலாக எடுத்துச் செல்கிறது. தமிழ்நாடு அரசே சாத னைகளை விளக்கி தொடர்ந்து விளம்பரம் கொடுத்து வரும் நிலையில். மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏன் பாரபட்சம் காட்டுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாகன நிறுத்துமிடம் இல்லாத திருமண மண்டபங்கள், உணவகங்களால் விருதுநகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி
விருதுநகர், செப்.11- மாவட்டத் தலைநகரான விருதுநக ரில் வாகன நிறுத்துமிடம் இன்றி கட்டப் பட்டுள்ள திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்களால் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் ஏராளமான திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்கள் உள்ளன. இவற் றின் முன் பகுதியில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த போதிய இட வசதியின்றி கட்டப்பட்டுள் ளது. குறிப்பாக விருதுநகரில் உள்ள அருப்புக்கோட்டை சாலையில் ஏராள மான திருமண மண்டபங்கள் உள்ளன. இவற்றில் ஒரு சில மண்டபத்தில் மட்டுமே வாகன நிறுத்துமிடம் சிறிய தாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் அதிக அளவில் வாகனங்கள் வந்தால் சாலையோரங்களிலேயே நிறுத்தப் படும் நிலை ஏற்படுகிறது. இதேபோல், நகரின் முக்கியச் சாலையாக உள்ள இராமமூர்த்தி சாலை, மதுரை சாலை, கிருஷ்ண மாச்சாரி சாலை, புல்லலக்கோட்டை சாலை, பி2.பி2 சாலை ஆகிய பகுதி களில் உள்ள திருமண மண்டபங்களி லும் வாகன நிறுத்துமிடம் கட்டப்பட வில்லை. சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மேலும், விருதுநகரில் நகராட்சி சாலை மற்றும் பழைய பேருந்து நிலை யத்தை சுற்றியுள்ள பெரிய உணவ கங்களிலும் பார்க்கிங் வசதி செய்து தரப்படவில்லை. இதனால், உணவ கங்களுக்கு வருவோர் தங்களது இரு சக்கர மற்றும் இலகுரக வாகனங்க ளை சாலையோரங்களில் நிறுத்து கின்றனர். இதனால், அப்பகுதியில் பொது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், பேருந்து உள்ளிட்ட வாகனங்க ளில் பயணம் செய்வோர் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்ற னர். இப்பகுதிகளில், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறை வாக னங்கள் கூட எளிதில் செல்லமுடியாத நிலையும் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் வாகன நிறுத்துமிடம் இல்லாத திரு மண மண்டபங்கள் மற்றும் உண வகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனுமதியின்றி பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது
சிவகாசி, செப்.11- சிவகாசி அருகே அனுமதியின்றி எளிதில் தீப்பற்றக் கூடிய பட்டாசு திரிகளை வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே உள்ளது வெள்ளையாபுரம். இங்கு திருத்தங்கல் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, தனியார் செட்டில் திரிகள் மற்றும் 25 சாட் வெடி குழாய் கள் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, வள்ளிமுத்து (33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
இருசக்கர வாகனம் மாயம்
அருப்புக்கோட்டை, செப்.11- அருப்புக்கோட்டை அருகே வீட்டின் பின்பு நிறுத்தப் பட்ட இரு சக்கர வாகனம் மாயமானது. அருப்புக்கோட்டை அருகே உள்ளது செட்டிக்குறிச்சி. இப்பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி(35). இவர் தனது இரு சக்கர வாகனத்தை வழக்கம் போல பின்புறம் நிறுத்தியிருந்தாராம். திரும்பி வந்து பார்த்த போது அதை காணவில்லையாம். எனவே, இதுகுறித்து பந்தல்குடி காவல் நிலையத்தில்புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வாகனத்தை தேடி வருகின்றனர்.
கோழிப் பண்ணையில் பட்டாசுகள் தயாரிப்பு : ஊராட்சிமன்றத் தலைவர் உட்பட 2 பேர் மீது வழக்கு
வெம்பக்கோட்டை, செப்.11- வெம்பக்கோட்டை அருகே கோழிப்பண்ணையில் பட்டாசு தயாரித்த ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள கொங்கன்குளத்தில் ஆலங்குளம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, தனியார் கோழிப் பண்ணையில் மிசின் திரி, 160 மற்றும் 240 ஷாட் குழாய்கள் உள்ளிட்டவை இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கொங்கன்குளம் ஊராட்சிமன்றத் தலைவர் பால கிருஷ்ணன்(71), பாலமுருகன்(எ) ருத்ரா பாலமுருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின் றனர்.