districts

வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

சாத்தூர், ஏப்.5- சாத்தூர் வெங்கடாசலபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ஹரி சங்கர் (26). இவரது  செல்போனில்  அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில்  பேசிய நபர்,  தான் பெங்களூர் கெம்பேக வுடா விமான நிலையத்திலிருந்து பேசு வதாகவும், இங்கு மெக்கானிக்கல் சூப்பர் வைசர் வேலை தயாராக இருப்பதாக வும், நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் வேலையில் சேர்ந்து விட லாம் எனக் கூறியுள்ளார். இதேபோல், ஹரி சங்கரிடம் கவு தம், மித்ரா, மல்கோத்ரா, ஷகில் உள்ளிட்ட ஏழு பேர் தொடர்ந்து பேசியதாகக் கூறப் படுகிறது.  இதனை நம்பிய ஹரிசங்கர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ.11 லட்சத்து 98ஆயி ரத்தை செலுத்தியுள்ளார். இந்தநிலை யில் அவர்கள் மேலும் பணத்தை வங்கி கணக்கில் செலுத்துமாறு தெரிவித்துள்ள னர். இதனால் ஹரிசங்கருக்கு சந்தேகம் ந்துள்ளது. எனவே,  தனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்‌. அதன் பின் அவர்களது  செல்போன்கள்  அனைத்து வைக்கப்பட்டது.   இதையடுத்து,  ஹரிசங்கர்,  விருது நகர் மாவட்ட காவல்துறையில்  புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.