மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து, மத்திய தொழிற்சங்கத்தினர் தருமபுரி மாவட்டத்தில் பிப்.17, 18 ஆகிய இரண்டு நாட்கள் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, எல்பிஎப் மாவட்ட கவுன்சில் தலைவர் அன்புமணி, செயலாளர் பி.எம்.சண்முக ராஜா, ஏஐடியுசி, மாவட்ட பொதுச்செயலாளர் கே.மணி, எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.