திருவில்லிபுத்தூர், டிச.22- விருதுநகர் மாவட்டம், திரு வில்லிபுத்தூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 947 பயனாளிகளுக்கு ரூ.1.62 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வருவாய் -பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வரு வாய் அலுவலர் மங்களராம சுப்பிரமணியன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, வருவாய் கோட்டாட்சி யர் புஷ்பா, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலை வர் கு.ஆறுமுகம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய குழுத் தலை வர் சிந்துமுருகன், வட்டாட்சியர் ராமசுப்ரமணியம் மற்றும் அரசு அலுவலர்கள், வருவாய்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.