மதுரை, ஜூலை 4- மதுரையில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு நவீனமயமாக்கப்பட்ட வில்லாபுரம் மாநக ராட்சி மகப்பேறு மருத்துவமனையில் திங்க ளன்று முதன் முறையாக குழந்தை பிறந் தது. மதுரை மாநகராட்சி மண்டலம் நான்கில் அமைந்துள்ள 86-ஆவது வார்டு வில்லா புரம் பகுதியில் அதிகளவு மக்கள் வசிக்கின் றனர். 1991-ஆம் ஆண்டு வில்லாபுரத்தில் முதன் முதலில் சுகாதார மையம் திறக்கப் பட்டது. வார்டில் மக்கள் தொகை அதிக ரித்து வருவதால், வசதிகளை மேம்படுத்த மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதி காரிகளும் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இருப்பினும், 2016- ஆம் ஆண்டு ஆரம்பசுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2021- ஆம் ஆண்டு, தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன், மகப் பேறு வார்டுகள், கர்ப்பிணித் தாய்மார்களுக் கான சிறப்பு அறைகள், அறுவை சிகிச் சைக்குப் பின் சிகிச்சை பெறுவதற்கான பிரிவு ஆகியவற்றை மாநகராட்சி கட்டி யது. இந்த வசதியை ஜூன் 23 அன்று சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிலையில் திங்களன்று இங்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது. தாயையும், குழந்தையையும் மேயர் இந்திராணி, துணை மேயர் நாக ராஜன், ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், ஆகியோர் பாராட்டினார். தொடர்ந்து தாய்-சேய் இருவரின் நலன் குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து மருத்துவமனை மருத்து வர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்து வப் பணியாளர்களைப் பாராட்டினர்.