சிவகாசி அருகே கார் மோதி விபத்து: ஒருவர் பலி
சிவகாசி, ஜூன் 8- சிவகாசி-நாராணாபுரம் சாலையில் உள்ள முருகன் காலனியை சேர்ந்தவர் பெரி யநாயகம். இவரது மகன் செல்வம் (27). இவர் தனது நண்பர் வினோத்குமார் (28) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிவகாசி-வெம் பக்கோட்டை சாலையில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் செல்வம், வினோத் குமார் இருவரும் பலத்த காய மடைந்தனர். உடனே அரு கில் இருந்தவர்கள் இருவரை யும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல் லும் வழியில் செல்வம் உயிரிழந்தார். காயமடைந்த வினோத்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பெரிய நாயகம் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி நகர் காவல் நிலையத்தினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடுப்புச்சுவரில் மோதி மினிலாரி விபத்து
நத்தம், ஜூன் 8- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத் தம் அருகே கொசவபட்டிக்கு சோப்பு ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. செவ்வா யன்று இரவில் கோபால்பட்டி பகுதியில் வந்து கொண்டி ருந்த போது எதிர்பாராத வித மாக சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.. இதில் லாரி கண்ணாடி உடைந்து முன்பக்கம் சேத மடைந்தது. இதில் சிங்கம் புணரியை சேர்ந்த லாரி டிரை வர் சித்திக்(35) காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர மைத்தனர்.
செல்போன் பறிப்பு: 3 பேர் கைது
தேனி, ஜூன் 8- போடி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் சிவக்கண்ணன் (40). இவர் மின்சாதன பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவர் போடி வினோ பாஜி காலனியில் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த போடி வினோபாஜி காலனியை சேர்ந்த உதயகுமார் மகன் ரஞ்சித்குமார் (20) , போடி சுப்புராஜ் நகரை சேர்ந்த முத்து மகன் விக்னேஷ்குமார் (19) ஆகியோர் சிவக்கண் ணனை இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டனர். போடி வினோபாஜி காலனியை சேர்ந்த சின்ன கருப்பையா மகன் அருண்குமார் (22), என்பவர் கத்தியை சிவக்கண்ணனின் கழுத்தருகே வைத்து மிரட்டி அவரிடமிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரொக்க பணம் ரூ.500 ஆகியவற்றை பறித்துக் கொண்டார். சிவக்கண்ணன் சத்தம் போடவே 3 பேரும் தப்பிவிட்டனர். இதுகுறித்து சிவக்கண்ணன் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அருண்குமார், ரஞ்சித்குமார், விக்னேஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரயில்வே மேம்பாலத்தில் ஆண் சடலம் மீட்பு
நிலக்கோட்டை, ஜூன் 8- திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே பள்ளப்பட்டியில் மது ரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்லும் மேல்நிலை இரயில்வே தண்டவாளம் அருகே முட்புதரில் 25 வயது மதிக்கதக்க அழுகிய நிலையில் மண்டை ஓடு எலும்புகளுடன் துர் நாற்றம் வீசிய நிலையில் அடையா ளம் தெரியாத ஆண் சடலம் கிடந் துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து கொடைரோடு ரயில்வே காவல் துறை அதிகாரி மணிவண்ணக்குமார் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினருடன் இணைந்து சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.