districts

img

ஒட்டன்சத்திரம் பகுதியில் மக்காச்சோளம் அமோக விளைச்சல் கூடுதல் விலை கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஒட்டன்சத்திரம், பிப்.17-  ஒட்டன்சத்திரம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்திற்கு கூடுதல் விலை கிடைக்குமா? என்று விவ சாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம் பட்டி, கள்ளிமந்தையம், அப்பியம்பட்டி நால்ரோடு, கூத்தம்பம்பூண்டி, பொருளுர் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் காய்கறிப் பயிர்கள், தானியங்கள், சோளம், மக்காச்சோளம், புகையிலை, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.  தற்போது மக்காச்சோளம் அறுவடை நடக்கிறது. உள்ளூர் விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.  இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், மக்காச்சோளப்பயிருக்கு கடந்த காலத்தில் ஏற்பட்டது போல் படைப்புழு பாதிப்பு அதிகளவு ஏற் பட்டுள்ளது. தற்போது ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ. 2 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 20 முதல் 25 குவிண்டால் கிடைக்கும். விவசாயம் சார்ந்த அனைத்தும் விலை உயர்ந்து விட்டதால் மக்காச்சோள கொள்முதல் விலை 2500 ரூபாய்க்கு மேல் இருந்தால் ஓரளவுக்கு லாபம் ஈட்ட முடியும். எனவே கூடுதல் விலைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.