districts

போலி செயலி மூலம் ஏசி இயந்திரம் வாங்கி மோசடி

கோவை, பிப்.19- கோவையில் போலி பேமெண்ட் செயலி மூலம் ஏசி இயந்திரம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர், மொத்த ஏசி விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த நவ.4 ஆம் தேதியன்று வாட்ஸ்  அப் மூலம் அழைத்த அடையாளம் தெரி யாத நபர் ஒருவர், தனது பெயர் சிவக் குமார் என்றும், பிரனவ் ஹார்வேர்ஸ் நிறுவனத்தில் இருந்து அழைப்பதாக கூறி அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு புளூ ஸ்டார் ஏசி  இயந்திரம் வேண்டும் என பேசியுள் ளார். மேலும் விலையை கேட்ட பின் அந்த நபர் ஜி.எஸ்.டி தகவல், யு.டி.ஆர் எண் மற்றும் ரூ.75 ஆயிரம் பணம் செலுத் தியதற்கான போலியான ரசீது ஆகிய வற்றை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி யுள்ளார். அதேபோல பணம் செலுத்தப் பட்டதாக தினேஷ்குமார் செல்போ னுக்கு குறுஞ்செய்தியும் வந்துள்ளது. சிறிது நேரத்தில் தினேஷ்குமாரின் அலுவலகத்திற்கு வந்த ரேபிட்டோ ஆட்டோ ஓட்டுநர் யுவராஜ் என்பவர் 2  ஏசி இயந்திரத்தில் ஆட்டோவில் எடுத் துச் சென்றுள்ளார். இதன்பின் தினேஷ் குமார் தனது வங்கி ஸ்டேட்மெண்ட்  எடுத்து பார்த்த போது குறுஞ்செய்தி யில் வந்தது போல, வங்கி கணக்கில் பணம் வரவில்லை என்பதும் தெரிய வந்தது. இதனால் உடனடியாக அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்த்த தினேஷ்குமார் கோவை மாந கர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீ சார் விசாரணை மேற்கொண்டு, வழக் கில் தொடர்புடைய உக்கடம் பகுதி யைச் சேர்ந்த சேக் அப்துல்லா காதர்  (46), கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சலீம் (48), குனியமுத்தூரை சேர்ந்த மன்சூர் அலி (42) ஆகிய மூன்று பேரை செவ்வாயன்று பிடித்தனர். விசாரணை யில் மூன்று பேரும் சேர்ந்து ஆன்லைன் மூலம் “போலி பேமெண்ட் செயலி” குறித்து யுடியூப் மூலம் பார்த்து, அதனை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து, ஏசி மொத்த விற்பனை கடை களை குறி வைத்து விலை உயர்ந்த ஏசி சாதங்களை வாங்கி மோசடியில் ஈடு பட்டது தெரியவந்தது. இதேபோல கோவை மாநகரில் மட்டுமே 16 மொத்த வியாபாரிகளை ஏமாற்றி ஏசி இயந்தி ரத்தை வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், புறநகர் மற்றும் வேறு மாவட்டங்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.