தஞ்சாவூர், செப்.17 - சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடித்து விட்டு, கரை திரும்பும் போது அதிகாரி கள் ஆய்வு செய்யக் கூடாது என வலியுறுத்தி, விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தஞ்சை மாவட்டத்தில், கடந்த கால புரிந்துணர்வு ஒப்பந்தப்படி விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களிலும், மற்ற தினங்க ளில் நாட்டுப்படகு மீனவர்க ளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும். ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி நாட்டுப்படகு மீன வர்கள் தினமும் கடலுக்கு செல்கின்றனர். விசைப்படகு மீனவர்களும், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்வ தாக, இருதரப்பு மீனவர்க ளும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதை தடுக்கும் வகை யில், இரட்டை மடி வலை பயன்படுத்தப்படுகிறதா என மீன்வளத்துறை அதிகாரி கள் மற்றும் கடலோர காவல் துறை அதிகாரிகள் இணைந்து கடலுக்கு சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பும் விசைப்படகுகளை துறைமுகங்களில் வைத்து ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர்.
இதனால் வியாபா ரம் பாதிக்கப்படுவதாக கூறி சேதுபாவாசத்திரம் விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதுகுறித்து தஞ்சை மாவட்ட விசைப்படகு மீன வர் சங்க தலைவர் ராஜமா ணிக்கம் கூறுகையில், விசைப்படகுகள் ஒருமுறை கடலுக்கு சென்று திரும்பி வர டீசல் மற்றும் ஆட்கள் கூலி என ரூ.30 ஆயிரம் செல வாகிறது. இதனால் தற்போது ரூ.20 ஆயிரம் கூட வரு வாய் கிடைப்பதில்லை. ரூ.10 ஆயிரம் நட்டத்தில் தொழில் நடத்தி வருகிறோம். இந்நி லையில் கடலுக்கு சென்று கரை திரும்பும் படகுகளை துறைமுகங்களில் வைத்து மீன்வளத்துறை அதிகாரி கள் ஆய்வு செய்வதால் மீன வர்கள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைகின்றனர். இதனால் விற்பனை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே ஆய்வு நடவடிக் கையை மாற்றி அமைக்க வேண்டும் என கூறி கடந்த திங்கட்கிழமை முதல் மீன வர்கள் கடலுக்கு செல்ல வில்லை. மீன்வளத்துறை அதி காரிகள் கடலுக்கு உள்ளே சென்று படகுகளில் ஆய்வு செய்து செய்வதிலோ, கட லுக்கு செல்லும் போது படகு களை ஆய்வு செய்வதி லும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடை யாது. மீன் பிடித்து விட்டு கரை திரும்பும் படகுகளை துறை முகங்களில் வைத்து ஆய்வு செய்வதை நிறுத்த வேண் டும். இதற்கு தீர்வு கிடைக் கும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லப் போவ தில்லை” என்றார். இதனால் சேதுபாவா சத்திரம் மீன்பிடி துறை முகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வேலைக்கு செல்லாமல் பாது காப்பாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.