இராமேஸ்வரம், ஜுன் 16- இறாலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர். 60 நாள் மீன் பிடித் தடைக் காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து சனிக்கிழமை அன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். போதுமான அளவு மீன்கள், இறால்கள் கிடைத்த போதும், அதற்கான விலையை தனியார் நிறுவனங் கள் கொடுக்க மறுப்பதாக இராமேஸ்வரம் விசைப் படகு மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ள னர். தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து கொண்டு இறாலை சொற்ப விலைக்கு கேட்பதாகவும் புகார் கூறியுள்ளனர். எனவே இறாலுக்கு அரசே உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி திங்க ளன்று போராட்டம் அறிவித்துள் ளனர். இதனால் 850க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.