districts

img

ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க கோரி தர்ணா

சென்னை, செப். 28 - ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க கோரி சனிக்கிழமையன்று (செப்.28) சென்னை பூக்கடை பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என்பிஎஸ், யுபிஎஸ் ஓய்வூதிய திட்டங்களை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் ஓய்வூ தியர்களுக்கு  2017 ஜனவரி முதல் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 ஊதியக் குழுவை அமைக்க வேண்டும். 18 மாத அகவிலைப்படி முடக்கத்தை வழங்க வேண்டும். கம்யூடேஷன் காலத்தை 12 ஆண்டுகளாக மாற்றிட வேண்டும். மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகையை வழங்க வேண்டும். 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியமாக 5 விழுக்காடு தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூ தியர் சங்கங்களின் தேசிய ஒருங்கி ணைப்புக் குழுவின், தமிழ்நாடு மாநில இணைப்புக் குழு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழி லாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இப்பிரச்சனையில் மாநில அரசு தலையிட  கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் தலைவர் பி.மோகன் தலைமையில் நடை பெற்ற இந்தப் போராட்டத்தில், ஒருங்கி ணைப்புக் குழுவின் மாதபொதுச் செய லாளர் கே.ராகவேந்திரன், துணைத் தலை வர் ஆர்.இளங்கோவன், மாநில ஒருங்கி ணைப்பாளர் சி.கே.நரசிம்மன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஆர்.ராஜ சேகர், சென்னை மாநிலச் செயலாளர் கே.கோவிந்தராஜ், வருமான வரித்துறை ஓய்வூதியர் சங்க துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, தட்சிண ரயில்வே ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.முருகேசன், அஞ்சல் ஓய்வூதியர் சங்கத்தின் அகில இந்திய பொருளாளர் சேகர், சண்முக சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.