districts

img

கடும் போக்குவரத்து நெருக்கடி ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தி சிபிஎம் முன்னெடுப்பில் ஆலோசனை கூட்டம்

தேனி, செப்.21- கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்து வரும் ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தி தொடர் இயக்கம் நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுப்பில் பல்வேறு அமைப்புகள்  பங்கேற்ற  ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தேனி  மற்றும் கேரளாவிலிருந்து செல்வதற்கு கொச்சி -இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்   ஆண்டிபட்டி  நகருக்குள் சென்று தான் செல்ல வேண்டும் .இந்த தேசிய நெடுஞ்சாலை துவங்கி சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகி யும் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, போடி ஆகிய முக்கிய நகரங்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட வில்லை .பள்ளி ,கல்லூரி ,அரசு வேலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ,ஆம்புலன்ஸ் வாக னம் கூட சிக்கி திணறும் நிலை தொடர்ந்து ஏற்படுகிறது. நெரிசலை கட்டுப்படுத்தி ,மக்கள் -வியாபாரிகள் அமை திக்கும், சீரான போக்குவரத்தை ஏற்படுத்த புறவழிச் சாலை ஒன்றே நிரந்தர தீர்வாகும் .புறவழிச் சாலை அமைப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெ டுப்பில் ஆலோசனை கூட்டம் ஆண்டிபட்டியில் உள்ள ஆயிர வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது . ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பழனிசாமி ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.தொழில திபர் விகேஎஸ்.சுப்பு முன்னிலை வகித்தார் . மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன் நோக்கவுரையாற்றினார். பலசரக்கு வியாபாரிகள் சங்க தலைவர் சோலைமலை , பாத்திர வியா பாரிகள் சங்க தலைவர் காமராஜ் ,பத்திர எழுத்தாளர் சங்க தலைவர் தங்கவேல் ,கூட்டுறவு ஊழியர் சங்க  தலைவர் ஜெயக்குமார் ,நகை வியாபாரிகள் சங்க தலை வர் கவிஞர் ஞானபாரதி ,சாலையோர வியாபாரிகள் சங்க  தலைவர் சுப்புராஜ் ,ஜக்கம்பட்டி வர்த்தகர்கள் சங்க தலை வர் கணேசன் ,விசைத்தறி தொழிலாளர் சங்க தலைவர்  எஸ்.ராமர் ,விசைத்தறி தொழிலாளர் சங்க தலைவர் கே.எஸ்.தங்கவேல் ,விவசாயிகள் சங்க தலைவர் ரெங்க நாதான் ,ராஜா விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத்  தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு ,எஸ்.அய்யர் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.தயா ளன், மா.தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

சிறப்பு மாநாடு 

கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆண்டிபட்டி புறவழிச்சாலை திட்டத்தை துவக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆண்டி பட்டியில் சிறப்பு மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது .அதுவரை பள்ளி ,கல்லூரி நேரம் ,அரசு அலுவலக நேரங்களில் ஆண்டிபட்டி முக்கிய வீதிகளில் கனரக  வாகனகள் செல்ல தடை விதிக்க வேண்டும் .தெப்பம்  பட்டி விலக்கு ,எம்ஜிஆர் சிலை ,தேவர் சிலை ,பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு காவ லர்கள் மூலம் கண்காணித்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .