மதுரை, மார்ச்.22- தமிழக அரசு மாற்றுத்திற னாளிகளுக்கான உதவித் தொகையை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் செவ் வாயன்று சென்னை எழில கம் முற்றுகை போராட்டத் திற்கு மதுரை ரயில் நிலை யத்திலிருந்து திங்களன்று இரவு புறப்பட இருந்த 20- க்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகளை காவல்துறையி னர் தடுத்து நிறுத்தினர்.இத னைக் கண்டித்து ரயில் நிலை யம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரயில்களில் டிக்கெட் வழங்கக் கூடாது என ரயில்வே ஊழியர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போராட்டம் நீடித்தது. இதனால் மதுரை ரயில் நிலையத்தில் காவல்துறை பாதுகாப்பு அதிகரித்தபடி இருந்தது. தொடர்ந்து போ ராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான டி. குமரவேல், மாவட்ட துணைத் தலைவர் ஏ. பாண்டி, புறநகர் மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட் டோர் காவல்துறையினரால் நள்ளிரவில் மதுரை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மாற்றுத்திற னாளிகள் நள்ளிரவு ஒரு மணிக்கு விடுதலை செய்யப் பட்ட நிலையில் செவ்வா யன்று காலை காவல்துறையி னர் கைது நடவடிக்கையை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.