districts

img

மதுரையில் கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிகளை முதல்வர் ஆய்வு

மதுரை, ஜூன் 7- மதுரை மாவட்டம், புதுநத்தம் சாலை யில் 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,13,288 சதுர அடி கட்டடப் பரப்பளவில்  கட்டப்பட்டு வரும் முத்தமிழறிஞர் கலை ஞர் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 7 அன்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.  தரைதளத்துடன் கூடிய 6 தளங்கள் கொண்ட நூலக கட்டடம் 2,13,288 சதுர  அடி கட்டடப் பரப்பளவில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, 11.01.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத் தார். 12 மாதங்களுக்குள் பணிகளை 100 சதவிகிதம் நிறைவேற்றி சிறப்பு  வாய்ந்த இந்த நூலகத்தை பொதுமக் கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்  நோக்கில் பணிகள் துரிதமாக மேற்  கொள்ளப்பட்டு வருகின்றன. தொடு திரை வசதி, ஜெனரேட்டர் வசதி மற்றும்  6 மாடிகளுக்கும் சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக நகரும் படிகட்டுகள் வசதி, நூல கம் முழுவதும் குளிர்சாதன வசதி  என பல்வேறு நவீன வசதிகளுடன் நூல கத்தை அமைப்பதற்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. அத்துடன் மாடித் தோட்டத்துடன் நூல்களை படிப்பதற்கான வசதியும், கலைக்கூடமும் அமைக்கப்படுகிறது.  கட்டுமானப் பணிகளை விரைவாக வும், தரமாகவும் மேற்கொண்டு, உரிய  காலத்திற்குள் பொதுமக்கள் பயன்  பாட்டிற்கு கொண்டுவரவும் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.  இந்நிகழ்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு,வருவாய்- பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்  னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,வணிகவரி-பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்  பில் மகேஸ் பொய்யாமொழி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பி னர்கள் ஏ.வெங்கடேசன், ஜி.தளபதி, எம்.பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. எஸ்.அனீஷ் சேகர், பொது  நூலக இயக்குநர் (பொறுப்பு) க. இளம்பகவத் மற்றும் அரசு உயர் அலு வலர்கள் உடனிருந்தனர்.