districts

img

அவிநாசியில் வளர்ச்சிப் பணிகள்: ஆ.ராசா எம்.பி தொடங்கி வைத்தார்

அவிநாசி, பிப்.19 – அவிநாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப் பினர் ஆ.ராசா திங்களன்று துவக்கி வைத்தார். பழங்கரை ஊராட்சி அவி நாசிலிங்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.17 லட்சம் மதிப்பில் கணினி ஆய்வுக் கூடம் அமைக்கும் பணி, தெக்கலூர் ஊராட் சியில் ரூ.47 லட்சம் மதிப்பில்  மேம்படுத்தப் பட்ட சந்தைப்பேட்டை திறப்பு விழா, கருமா பாளையம் ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப் பில் அமைக்கப்பட்ட பால் கொள்முதல் நிலை யம் திறப்பு விழா,  ரூ.17 லட்சம் மதிப்பில் சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடிக் கல் நாட்டு விழா உள்ளிட்ட பணிகளை நீலகிரி  மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்வில் திமுக வடக்கு மாவட்டப்  பொறுப்பாளர் திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப் பினர் சரவணன் நம்பி, ஒன்றியச் செயலாளர்  சிவப்பிரகாஷ், பழனிச்சாமி, பால்ராஜ், முன் னாள் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல தமிழ் தாத்தா என்று அழைக் கப்படும் உ.வே.சாமிநாதய்யர் பிறந்தநாள்  விழாவை முன்னிட்டு நம்பியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டக்காம்பாளை யம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  கல்விப் பயின்று வரும் குழந்தைகளுக்கு, பொள்ளாச்சி முனைவர் செல்லாத்தாள் ஜெயக்குமார் ஏற்பாட்டில் பள்ளி சீருடை களை திமுக ஒன்றியச் செயலாளர் பழனிச் சாமி வழங்கினார்.