districts

img

தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய சிஐடியு கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஏப். 18- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என சிஐடியு மாவட்ட பேரவை வலியுறுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி லலிதா அண்ணாஜி நினை வகத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட பேரவை கூட்டம் செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.ஜி.சந்தானம், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் நஞ்சுண்டன் நிர்வாகி கள் ராஜா பெரியசாமி ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்துள்ள 15,000 ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப், திட்டத்தை அமலாக்க வேண்டும், 3 ஆண்டுகள் பணி செய்த ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 2019ஆம் ஆண்டு அரசாணைப்படி மாநகராட்சி, நகராட்சியில் தினசரி 510 ரூபாயும், பேரூராட்சியில் 480 ரூபாயும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளர்களை நல வாரியத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நன்றி கூறினார்.