கிருஷ்ணகிரி,ஜூலை 5- மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 100 நாள் வேலை அட்டை, உடற் தகுதிக் கேற்ற 4 மணி நேர வேலை, சரி யான கூலி, பாக்கி தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றியத் தலைவர் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில துணைத்தலைவர் திருப்பதி மாவட்டச் செயலாளர் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் போச்சம் பள்ளி வட்டச் செயலாளர் சாமு, தட்டக்கல் ஊராட்சி வார்டு உறுப்பினர் கடல் வேந்தன, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கேசி. ராம சாமி ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தை யில் அனைத்து கோரிக்கைகளை யும் செயல்படுத்த அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தனர். இதனையடுத்து, மாற்றுத்திறனாளி கள் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.