districts

விளை நிலங்களில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு

கிருஷ்ணகிரி,மே 15- சூளகிரி வட்டத்தில் சிப்காட் அமைப்பதற்கு விவசாய நிலத்தை அனுமதியின்றி எடுப்பதை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சூளகிரி வட்ட  7 வது மாநாடு உத்தன பள்ளியில் வட்டத் தலைவர் எம்.எம்.ராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பி. டில்லிபாபு துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர், செயற்குழு உறுப்பினர்கள் சாம்ராஜ், இருதயராஜ் ஆகியோர்  கலந்து கொண்டனர். இம் மாநாட்டில் வட்டத் தலைவராக எம்எம்.ராஜூ, செயலாளராக முருகேஷ், பொருளாளராக சத்யநாராயணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி,சூளகிரிக்கு உட்பட்ட 15 கிராமங்கள் 6000 வீடுகள், 50 ஆயிரம் மக்கள். 5 ஏரிகள், 50,000 தென்னை மரங்கள்,  1500 பம்பு செட்டுகள் ஆகியவற்றை அழித்து சிப் காட் அமைப்பதற்காக விளை நிலங்களை கையகப்படுத்த முயற்சிப்பதை மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் கைவிட வேண்டும்.  கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வரும் வலது கால்வாயை சூளகிரி உத்தனப்பள்ளி வழியாக நீட்டித்து 24 ஏரிகளை நிரப்பிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புகாணப்பள்ளி உட்பட பல கிராமங்களில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கொடுக்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கும், இதுவரை வீடு நிலம் இல்லாத ஏழை எளியவர்களுக்கும் 40 ஆண்டுகளாக புறம்போக்கில் வீடு கட்டி வசிக்கும் துப்பு காணப்பள்ளி உட்பட உடனடியாக இலவச வீடுகள், மனைகள், வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது