districts

img

பழிவாங்கும் நோக்கத்துடன் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கரூர் மாவட்ட கல்வி அலுவலரை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

கரூர், ஏப்.20 - பழிவாங்கும் நோக்கத்து டன் 7 ஆசிரியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்த  கரூர் மாவட்ட கல்வி அலுவ லரை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  கரூர் மாவட்டம் கடவூர்  ஒன்றியத்தில் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய் வில் அதிகாரிகள் செய்த  குளறுபடிகளால் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடவூர் ஒன்றிய ஆசிரியர்  மோகன் 1.4.2022 அன்று  தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். முறை யற்ற இந்த தற்காலிக பணி  நீக்கத்தை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்  பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கரூர் மாவட்டக் குழு சார்பில் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஏப்.11 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அன்றிரவு போராட்டம் தொடர்ந்த சூழ்நிலையில், ஆசிரியர் மோகன் மீது  எடுக்கப்பட்ட தற்காலிக பணி  நீக்க உத்தரவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ரத்து செய்யப் பட்டது. அதன் பின்னர் காத்தி ருப்பு போராட்டம் முடி விற்கு வந்தது. இந்நிலையில் எவ்வித முகாந்திரமுமின்றி போராட் டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜ. ஜெயராஜ், மாநில செயலா ளர் த.சகிலா உள்ளிட்ட ஏழு  மாவட்ட நிர்வாகிகளை தற்கா லிக பணி நீக்கம் செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கத்துடன் உத்தரவிட்டுள்ளனர்.

கரூர் மாவட்ட கல்வி அலுவலர் மதன்குமாரின் தூண்டுதலின் அடிப்படையிலேயே இந்த  தற்காலிக பணி நீக்க நட வடிக்கை நடைபெற்றி ருப்பதாக தெரிய வருகிறது. அநீதிக்கு எதிராக நியா யம் கேட்டு போராடிய சங்க தலைவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பதை கண்டனத்திற்குரியது. குறிப் பாக திமுக அரசுக்கு அவப் பெயரை உண்டாக்கும் எண்ணத்துடனும் தொ டர்ந்து ஆசிரியர் விரோத போக்குடன் முதன்மை கல்வி  அலுவலர் செயல்பட்டு வரு கிறார்.  தமிழக அரசு உடனடி யாக தலையிட்டு ஆசிரியர் கள் மீது எடுக்கப்பட்ட தற்கா லிக பணி நீக்கத்தை ரத்து  செய்திட வேண்டும். தொ டர்ந்து ஆசிரியர் சமுதாயத் தின் மீது விரோதப் போக்கை கடைபிடித்து வரும்  கரூர் மாவட்ட கல்வி அலுவ லர் மதன்குமார் மீது தமிழக  அரசும், மாவட்ட நிர்வாக மும் துறைரீதியான நடவடிக் கைகளை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்றது. சங்கத்தின் கரூர் கல்வி  மாவட்ட செயலாளர் ஆ.பிரான்்சிஸ் டேனி யல்ராஜா தலைமை வகித் தார். மாவட்ட துணை செய லாளர் பாலசுப்பிரமணி வர வேற்று பேசினார். மாநிலத் தலைவர்  மூ.மணிமேகலை ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநில பொதுச் செயலாளர்  ச.மயில்  ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றி னார். மாநில நிர்வாகிகள் மத்தேயு, கணேசன், ஜான் கிறிஸ்துராஜ், முன்னாள் மாநிலத் தலைவர் மோசஸ், மாநில துணைத்தலைவர் முருகன், கரூர் மாவட்டச் செயலாளர் ஜ.ஜெயராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்ர மணியன், மாநில செயலா ளர் த.சகிலா மற்றும் அனைத்து மாவட்ட செயலா ளர்கள் உட்பட ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்ட னர்.