districts

img

மாவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்க கோரிக்கை

கரூர், அக்.2 - அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியையொட்டி கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மாவத்தூர் ஊராட்சி மன்றம் சார்பில் கிராம சபை கூட்டம், மாவத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில்மோகன் தலைமை வகித்தார். துணைத்  தலைவர் பிரபாகுமார் வரவேற்றார். ஒன்றிய கவுன்சி லர் பி.ராமமூர்த்தி, கடவூர் ஒன்றிய மண்டல துணை அலுவலர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி செயலர் எம். அன்பழகன், கடவூர் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், மாவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பல்துறை  அலுவலர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்த னர்.  மாவத்தூர் ஊராட்சியில் உள்ள வறட்சியான பகுதி களுக்கு மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து, மாவத்தூர்  ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும். மாவத்தூர் ஊராட்சி மக்களுக்கு நூறுநாள் வேலை திட்டத்தில் பணி  வழங்க வேண்டும். மாவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிரா மங்களில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க காவிரி குடிநீர் வழங்க வேண்டும்.  தரகம்பட்டியிலிருந்து மாவத்தூர் வழியாக காலை,  மாலை வேளைகளில் வந்து கொண்டிருந்த நகரப் பேருந்து, கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். எனவே மீண்டும் அந்தப் பேருந்தை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு, ஊராட்சி மன்றத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற  தலைவர் கீதா செந்தில் மோகன் தெரிவித்தார்.