districts

img

மண் சாலையை தார்ச் சாலையாக அமைக்க கோரி சிபிஎம் மனு

கரூர், நவ.27 - கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி  ஒன்றியம், மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்குட் பட்ட வால்காட்டுப்புதூர் முதல் நத்தமேடு வரை செல்லும் பகுதியில் நூற்றுக்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இப்பகுதி மக்கள் கரூர் மாநகரில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி  செல்லும் மாணவ, மாணவிகள் என அனை வரும் வால்காட்டுப்புதூர் முதல் நத்தமேடு வரை செல்லும் மண் சாலையில் இரண்டு  சக்கர வாகனம் மற்றும் பேருந்து நிறுத்தத் தில் இருந்து நடந்தும் செல்கின்றனர்.   இந்த மண் சாலையை தார்ச்சாலையாக மற்றும் பணிக்காக, ஜனவரி மாதத்தில் மண் சாலையின் இரு புறமும் குழிபறித்து அந்த மண்ணை சாலையில் கொட்டினர். தற்போது இந்த சாலையில் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக இருக்கிறது.

இந்த மண் சாலையில் பயணம் செய்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  மண் சாலையை தார்ச் சாலையாக மற்றும் பணிக்காக நமக்கு நாமே திட்டத்தின்கீழ் அந்த பகுதி பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட தொகை ரூ.11 லட்சத்து 25 ஆயிரம், தங்களது பங்களிப்பாக 2024 ஜனவரி மாதம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் காசோலையாக வழங்கப்பட்டது.

கடந்த 11 மாதமாக தார்ச்சாலை அமைக்க எந்தவித நடவடிக்கையும் மேற் கொள்ளாமல் மூக்கணாங்குறிச்சி ஊராட்சி  நிர்வாகம் பணியை கிடப்பில் போடப்பட்டு உள்ளதை கண்டித்தும், தார்ச் சாலையாக அமைக்க வேண்டும் என வலியு றுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வால்காட்டுப் புதூர் கிளை சார்பில் தாந் தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கும் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு கட்சியின் கரூர் மாநகர செயலாளர் எம்.தண்டபாணி தலைமை  வகித்தார்.

கிளைச் செயலாளர் எஸ்.ராம கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார். மாவட்டக் குழு  உறுப்பினர்கள் ஆர்.ஹோச்சுமின், ஜீவா னந்தம், கிளை உறுப்பினர்கள் அன்புச் செல்வன், ராஜேந்திர பிரசாத், சூர்யா, சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.