districts

img

பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு துறையின் நூற்றாண்டு விழா விளையாட்டுப் போட்டிகள்

கரூர், அக்.28 - கரூர் மாவட்டம், மாவட்ட விளையாட்டு மைதான வளா கத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை யின் நூற்றாண்டு விழாவை யொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. கரூர் மாவட்ட விளை யாட்டு மைதானத்தில் பொது  சுகாதாரத்துறை சார்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறையின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி விழா வினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். பொது சுகாதாரம் மற்றும்  நோய் தடுப்பு மருத்துவத் துறையின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகை யில் பொது சுகாதாரத் துறை  அலுவலர்கள், செவிலியர் கள் மற்றும் பணியாளர்களுக் கான 100 மீ, 200 மீ ஓட்டப் பந்த யம், குண்டு எறிதல், கயிறு  இழுக்கும் போட்டி, புதை யல் எடுக்கும் போட்டி, கூடைப் பந்து, கையுந்துப் பந்து மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட குழு மற்றும் தனிநபர்  விளையாட்டுப் போட்டி விழாவினை, மாவட்ட ஆட்சி யர் கிரிக்கெட் விளையாடி போட்டிகளை தொடங்கி வைத்தார். நவ.10 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ள நூற்றாண்டு ஜோதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு  செல்லப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படை யில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு ஜோதி, கரூர்  மாவட்டத்திற்கு நவம்பர் 1 ஆம் தேதி வந்தடையும். நூற்றாண்டு விழா ஜோதியை வரவேற்கும் பகுதியில் சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.  வெள்ளியன்று கரூர்  மாவட்டத்தில் பணியாற்றும்  பொது சுகாதார ஊழியர் களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போட்டிகளில் கலந்து  கொண்டுள்ள அனைவருக் கும் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வாழ்த்து தெரி வித்தார். பின்னர் பொது சுகாதா ரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறையின் நூற் றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், பொது சுகாதாரத் துறை  அலுவலர்கள், செவிலியர் கள் மற்றும் பணியாளர்கள் 100 என்ற எண் வடிவத்தில் நின்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு புகைப் படம் எடுத்து கொண்டனர்.