கரூர், ஏப்.1- கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் தென்னிலையில் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்த னர். இதனையடுத்து தென்னிலை பேருந்து நிறுத்தம் அருகே சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் புதிய கிளை துவக்கப்பட்டது. விழாவிற்கு சங்க கிளைத் தலைவர் பி.வேலுச்சாமி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஆர்.பாலமுருகன் வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது பெயர் பலகையை திறந்து வைத்தார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் ப.சரவணன், ஆட்டோ சங்க கிளை பொருளாளர் ஆ.பாலூதீன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.