districts

மாணவி தற்கொலை

காஞ்சிபுரம்,ஜன. 13- காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் ரஜினி. அரசு பேருந்தில்  ஓட்டுநராக  உள்ளார். இவரது மனைவி லதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.   2-வது மகள் கனிஷ்கா (வயது 16). காஞ்சிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து உள்ளார். மாணவி கனிஷ்காவுக்கு ஆங்கிலப்பாடம் படிப்பதில் சிரமம் இருந்தது. ஆங்கில பாடத்தை சரிவர படிக்க வில்லை என்று ஆசிரியை ஒருவர் திட்டியதால் கனிஷ்கா தற்கொலை செய்து கொண்டார்.