districts

குறைவான பயிர்காப்பீட்டு தொகை விவசாயிகள் ஏமாற்றம்!

காஞ்சிபுரம், நவ.5- காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயி களின் ‘யானை பசிக்கு சோளப்பொரியாக’ இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதால் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் காஞ்சி புரம் மாவட்டத்தில் 35 ஆயிரம் ஏக்கருக்கு 52,451 விவசாயிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 ஆயிரம் ஏக்கருக்கு 12,123  விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். அந்த  ஆண்டின் இறுதியில் நவம்பர், டிசம்பர்  மாதங்களில்  பெய்த கடும் மழை வெள்ளத் தால்  நெல், கரும்பு, வேர்கடலை,வாழை மற்றும் காய்கறி பயிர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டன. இதனையடுத்து, கணக்கெடுப்பு நடத்திய தமிழக அரசு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது. ஆனாலும், பயிர் காப்பீடு செய்த விவசாயி களுக்கு அந்த காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு  தொகையை வழங்காமல் இருத்தடிப்பு செய்து வந்தது. இந்த நிலையில், பாதிக்கப் பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தியது. அதன் விளைவாக, காஞ்சிபுரம் மாவட்டத் தில் 12,483 விவசாயிகளுக்கு ரூ.19.27 கோடியை ஒதுக்கீடு செய்து இழப்பீடு வழங்கி யது காப்பீட்டு நிறுவனம். அதேபோல், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் 3,168  நபர்களுக்கு 3.09 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நேரு வெளி யிட்டிருக்கும் அறிக்கையில்,” பயிர் காப்பீடு  செய்யும் விவசாயிகளுக்கு அந்த நிறுவனம்  அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 28 ஆயிரத்து 800 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், காப்பீட்டு நிறுவனம் குறைந்தபட்சமாக 500  ரூபாயும் அதிகபட்சமாக 7000 ரூபாயும் இழப்பீடாக வழங்கி கொள்ளை லாபம்  அடித்திருப்பதை வன்மையாக கண்டிக்கி றோம்.  காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத் தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்திருப்பது குறித்து  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் முறை யிட்டும் பலன் இல்லை. எனவே, பயிர் காப்பீடு செய்த விவசாயி கள் அனைவருக்கும் முழுமையான நிவாரணம் கிடைக்கவும் விடுபட்ட பல ஆயி ரம் விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கு வதற்கும் பயிர் காப்பீடு செய்யும் அந்தந்த  பருவத்திலேயே இழப்பீடு வழங்குவதற்கும் ஒன்றிய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்றும் நேரு வலியுறுத்தியுள்ளார்.