tamilnadu

img

கடைமடைக்கு இன்னும் வந்து சேராத காவிரி நீர் விவசாயிகள் ஏமாற்றம் 

 சீர்காழி செப்-11 கொள்ளிடம் பகுதியான கடை மடைக்கு தண்ணீர் இதுவரை வந்து சேராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதி யில் வருடந்தோறும் குறுவை மற்றும் சம்பா நெற்பயிர் சுமார் 15 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குறுவை நெற்பயிர் சாகுபடியை விவசாயிகள் மிகவும் சிரமத்துடன் மோட்டார் மற்றும் டீசல் எஞ்ஜினைப் பயன்படுத்தி நிலத் தடி நீரின் மூலம் சாகுபடி செய்தனர்.  அதனைத் தொடர்ந்து சம்பா நெற் பயிர் சாகுபடி செய்யும் பணியில் விவ சாயிகள் ஆர்வம் காட்டி வருகின்ற னர். ஆனால் கொள்ளிடம் பகுதிக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. கடைமடை டெல்டா பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருவது அணைக்கரையாகும். மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு 65 ஆயி ரத்து 300 கன அடி நீர் திறந்து விடப் பட்டது. சில தினங்களுக்கும் முன்பும் மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாசனத்திற்காக முக்கியத்துவம் கொடுத்து அணைக்கரையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அணைக்கரையிலிருந்து வடவாறு பிரிந்து வடவாறிலிருந்து தண்ணீர் வீரா ணம் சென்று சேர்ந்து வீராணம் ஏரியிலி ருந்து சென்னைக்கு தண்ணீர் சென்று சேர்ந்து விட்டது. ஆனால் கடைமடை பகுதிக்கு பாசனம் தரும் வகையில் அணைக்கரையிலிருந்து பிரிந்து செல்லும் தெற்குராஜன் மற்றும் வடக்கு ராஜன் வாய்க்கால்களில் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.  மராமத்து பணி நடைபெற்று வரு வதால் தண்ணீரை பாசன வாய்க்கால் களில் திறந்து விட அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மராமத்துப் பணியை கோடைக் காலத்தில் நிறைவேற்றியி ருக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக தண்ணீர் திறந்து விடும் நிலையில் நடை பெறும் மராமத்துப் பணிகள் விவசாயி களை பெரிதும் பாதித்துள்ளது. காலம் கடந்து பயிரிட்டால் சாகுபடி முறையாக நடைபெறுமா என்ற அச்சம் விவ சாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.  காவிரியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட் டுள்ள நிலையில் பாசனத்திற்கு இது வரை தண்ணீர் வந்து சேரவில்லை. இது குறித்து கொள்ளிடம் வட்டார விவசாயி கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலை வர் சிவப்பிரகாசம் கூறுகையில், பாச னத்திற்கு ஒரு சில தினங்களில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் அணைக் கரையை நோக்கி நூற்றுக்கணக்கான விவசாயிகளை திரட்டி சேர்ந்து அணைக்கரையை திறக்கும் போராட் டம் நடத்தப்படும் என்றார்.