காஞ்சிபுரத்தில் ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு பெண் வியாபாரியை தாக்கிய அதிமுக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் சித்ரா என்பவர் வளையல் கடை வியாபாரம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதிமுகவின் மகளிர் அணி நகர இணை செயலாளரான திலகவதி என்பவர், சித்ராவின் வளையல் கடையில் வந்து ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டுள்ளார்.
ஆனால் பணம் கொடுக்காததால், வளையல் கடை வியாபாரி சித்ராவை, திலகவதி தாக்கியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சித்ரா போலீசில் புகார் அளித்ததன் பேரில் சிவகாஞ்சி போலீசார். அதிமுக பெண் நிர்வாகி திலகவதியை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.