districts

சாராயம் விற்ற  2 பேர் கைது

கள்ளக்குறிச்சி,செப். 24- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் வடகானந்தல் ஊரைச் சேர்ந்த தோப்புத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (56). இவர் தனது வீட்டின் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக கச்சிராய பாளையம் காவல் துறை யினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல்துறையினர் ஆறு முகம் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அருகே 2 லாரி டியூப்பில் 55 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்தி ருந்தது தெரிய வந்தது. அதேபோல் வடக்கநந்தல் கடை தெரு போகும் பாதை யில் உதயசூரியன் என்பவர் தனது வீட்டின் அருகே 2 லாரி டியூப்பில் 55 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து ஆறு முகம், உதயசூரியன் இருவரையும் கைது செய்து, 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.