districts

வெள்ளாற்றில் கொட்டப்படும் கோழி கழிவுகள்

கடலூர், செப். 8- திட்டக்குடி அருகே ஆவினங்குடி அருகாமை யில் உள்ள வெள்ளாற்றில் மர்ம நபர்கள் இறந்த பிராய்லர் கோழிகளை  கொட்டியுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாகசெல்பவர்கள் முகத்தில் துணியை வைத்து மூடிக்கொண்டு சென்று வருகின்றனர். மேலும் அந்த பகுதி யில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், கோழிகளை இழுத்துச் சென்று குடி யிருப்பு பகுதிகளில் போடு வதாலும், மழை பெய்து வரு வதாலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஒரே சமயத்தில் ஏராளமான கோழிகள் இறந்தது எப்படி? கோழிகள் நோய் தொற்று ஏற்பட்டு இறந்ததா என பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. கோழிகளை ஆற்றில் கொட்டிச் சென்றவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும், இறந்து கிடக்கும் கோழி களை முறையாக அப்புறப் படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.