கடலூர், அக்.9- கடலூர் மாநகராட்சி சாவடி பகுதியில் கடலூர்- சித்தூர் சாலையை இணைக்கும் கெடிலம் சாலைக்கு செல்லும் வழி யில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி தரமற்ற முறை யில் நடைபெறுவதாக அறிந்த அப்பகுதியினர் சனிக்கிழமையன்று பணி களை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, ரட்சகர் நகர், அண்ணாமலை நகர், சாந்தி நகர், கண்னையா நகர், சிவசக்தி நகர் என 20க்கும் மேற்பட்ட நகர்கள் இப்பகுதியில் உள்ளது. சுமார் 5000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் போக்கு வரத்து வாகனங்கள் செல்லக்கூடிய இந்த பிரதான சாலையியின் குறுக்கே கட்டப்படும் கால்வாயில் பாலம் கட்டுவதற்கு பதிலாக சாதாரண ஸ்லாப்புகளைக் கொண்டு மூடுவதால் கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியின் ஒட்டு மொத்த போக்குவரத்திற்கு மான பிரதான சாலையில் கட்டப்படும் இந்த பால மானது வாகனங்களில் எடையை தாங்கக்கூடிய சக்தி இல்லாத தரமற்ற கான்கிரீட் மூலம் கட்டப்படு வதால் உடைந்துவிடுகிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்படுவதுடன் பெரும் விபத்துகள் ஏற்படு கின்றன. புதிய குடி யிருப்புகள் கட்டுவதற்கான செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட், கம்பிகள், உள்ளிட்ட பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாக னங்கள் கடந்து செல்லக்கூடிய பாதையில் கட்டக்கூடிய கால்வாய் ஒப்பந்த விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு கட்டப்படுகிறது. இந்தப் பணிகளால் மக்களின் வரிப்பணம் முற்றிலும் வீணாகி உள்ளது. எனவே, அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து தரமான முறையில் கால்வாய் அமைக்க வேண்டும் என்றனர்.