பென்னாகரம், ஜுலை 30- பென்னாகரம் அருகே விவ சாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியானது விவசாயி களின் கடும் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், கூத்தப்பாடி ஊராட் சிக்கு உட்பட்ட சி.புதூர் கிராமத் தில் தங்கவேல் என்பவரின் விவ சாய நிலத்தில் திங்களன்று நிலத் தின் உரிமையாளரின் எதிர்ப்பை யும் மீறி உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதையடுத்து அப் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற் பட்ட விவசாயிகள் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இதைத்தொடர்ந்து விவ சாயிகளுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, உயர் மின் கோபு ரம் அமைக்கும் விவசாய நிலத் திற்கு வாடகை தர வேண்டும். விவசாய விளை பயிர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு வழங்க வேண் டும் அல்லது இத்திட்டத்தை கேபிள் மூலம் நெடுஞ்சாலைகள் வழியாக செயல்படுத்திட வேண் டும் என வலியுறுத்தினர். ஆனால், இக்கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் எவ்வித உறுதிமொழி யையும் அளிக்க முன்வராததால் விளை நிலங்களில் மின் கோபுரம் அமைக்க அனுமதிக்க மறுத்து விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இதையடுத்து உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட்டு அதிகாரிகள் அங்கி ருந்து திரும்பிச் சென்றனர். முன்னதாக, இப்போராட்டத் தில் உயர்மின் கோபுர எதிர்ப்பு கூட்டியத்கத்தின் பென்னாகரம் ஒருங்கிணைப்பாளர் கோடியூர் கரூரான், முனிரத்தினம், முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜ், அர்சுணன் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.