சிதம்பரம், மார்ச் 22- சிதம்பரம் அருகே சி.கொத்தங் குடி ஊராட்சி குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் ஊராட்சிக்குட் பட்ட 10க்கும் மேற்பட்ட நகர்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊராட்சிக்குட்பட்ட மீதிக்குடி மற்றும் திடல்மேடு சாலைகள் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் நகரத்திற்கு செல்லும் முக்கிய சாலை யாகும். இந்த சாலை கடந்த 2 ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் சாலைகளை சீரமைக்கக் கோரி வரும் மார்ச் 28ஆம் தேதி பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.