கடலூர், அக்.9- கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுத்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.பால சுப்ரமணியம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது: பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அலுவலர்களும் தயார்நிலையில் இருக்க வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பல்நோக்கு தங்கும் மையங்களை ஆய்வு செய்து அங்கு அடிப்படை வசதிகள் நல்ல நிலையில் உள்ளனவா எனவும், பழுது ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட துறையின் மூலம் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். ஏரி மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் செயல்பட முதல் நிலை மீட்பாளர்களை ஈடுபடுத்த வேண்டும். நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவில் இருப்பும், அரசு சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் காலத்தில் பாதிப்புகளை தவிர்த்திட வெள்ளத்தடுப்பாக வடிகாலில் உள்ள அடைப்புகளை அகற்றிட வேண்டும். வடகிழக்கு பருவ மழை காலத்தில் பொருட்கள் மற்றும் உயிர்சேதம் ஏதுவும் ஏற்படாமல் தவிர்க்கவும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார். கூட்டத்தில், திட்ட இயக்குநர் பவன்குமார் கிரியப்பன வர், சார் ஆட்சியர் சி.பழனி மற்றும் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், செயற்பொறியாளர்கள், பொதுப் பணித்துறை, மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.