கடலூர், டிச.10- தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படும் மக்களை பாது காக்க கான்கிரீட் தடுப்பு அமைக்ககோரி சிபிஎம் சார்பில் தலைமை தபால் நிலை யம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கடலூர் நடத்தப்பட்டு முதல் தாழங்குடா வரை தென்பெண்ணை ஆற்றில் கரையை உயர்த்தி கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும்,
நத்தப்பட்டு முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலும் கஷ்டம்ஸ் சாலையில் தெற்கு பகுதியில் ஒருங்கிணைந்த அகலமான வடிகால்வாய் அமைக்க வேண்டும், கஷ்டம்ஸ் சாலை முழுவதிலும் மின்விளக்கு அமைக்க வேண்டும், வெள்ளத்தில் உடமை களை இழந்தவர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.50ஆயிரம் வழங்க வேண்டும்,
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டைக்கு ரூ.5ஆயிரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செம்மண்டலம் கிளை செயலாளர் எஸ்.கே.தேவநாதன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மருத வாணன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், ஓய்வு பெற்ற சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் டி. புரு ஷோத்தமன், மாவட்ட தலைவர் என்.காசிநாதன், சிபிஎம் மாநகர குழு உறுப்பினர் திருமுருகன், மற்றும் எம்.பக்தவச்சலம், ஜே.அருள் பிரகாஷ், சக்திவேல், ஜோசப், சரவணன் தாமோதரன், பி.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.