கடலூர், மார்ச் 30- கடலூர் நகரத்தில் இளம் பெண் கூட்டு பாலியல் பலாத் காரம் செய்யப்பட்ட சம்பவத் திற்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கண்ட னம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் பி.தேன்மொழி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: காதலர்கள் இருவர் கம்மியம்பேட்டை அருகே பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த 3 பேர் காதலனை கட்டிப் போட்டு விட்டு அவர் கண் முன்னாலேயே இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள் ளனர். அதில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்வதைஇன்னொருவர் செல்போனில்வீடியோ எடுத்துள்ளார். ரோந்துப் பணியில் ஈடு பட்டிருந்த காவல்துறை மூவரையும் கைது செய்துள் ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இதுபோன்ற பாலியல் சம்பவம் நடைபெறுவது தொடர் கதையாகவே உள்ளது. இந்த சம்பவத்தை மாதர் சங்கம் வன்மையாக கண்டிக் கின்றோம். இரவு நேரங்களில் காவல்துறை தொடர்ந்து ரோந்து செல்ல வேண்டும். நகரில் மக்கள் நெருக்க முள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். குற்றவாளி களுக்கு கடுமையான தண்ட னை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.