கடலூர், நவ.14- கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தமிழக முதல்வருக்கு மனு அளித்துள்ளார். அந்த மனுவின் விவரம் வருமாறு- கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடர் மழையால் மக்க ளின் இயல்பு வாழ்க்கை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. கெடி லம், பெண்ணையாறு,வெள்ளாறு, மணிமுத்தாறு, பரவனாறு, கொள்ளி டம் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் ஓடு கிறது. கரையை ஒட்டி உள்ள வீடு கள், விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் தண்ணீரை திறந்து விட்டதால், குறிஞ்சிப்பாடி பகுதி யில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. மழையால் நூற்றுக் கணக்கான வீடுகள்இடிந்து விழுந்துள்ளன.மாவட்டம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சிதம்பரம் வட்டம், குமராட்சி ஒன்றியத்தில் வல்லம்படுகை, வல்லத் துறை, வரகூர், தீத்துக்குடி, பழைய நல்லூர், வையூர், திட்டுக் காட்டூர், ஜெயங்கொண்டபட்டினம், கடவாச்சேரி, கூத்தன் கோயில், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் கீழத்திருகழிப்பாலை. மேலதிருக்கழிப்பாலை, பிச்சா வரம், கீழ்ப்பரம்பை, கணக்கரப்பட்டு, உத்தமசோழமங்கலம், ராதாவிளாகம், பின்னத்தூர், கீழச்சாவடி, தில்லை விடங்கன், குமாரமங்கலம், கிள்ளை, வசப்புத்தூர், நற்கந்தகுடி, மீதிக்குடி, கோவிலாம்பூண்டி. காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் எடையார், பிள்ளையார்தாங்கள், வீர நத்தம், திருநாரையூர், மடப்புரம், வீராநல்லூர். திருமூட்டம் வட்டத்தில் சர்வராஜபேட்டை, நந்தீஸ்வர மங்கலம், முடிகண்டநல்லூர், மழ வராயநல்லூர், கோதண்டவளாகம், நகரப்பாடி, ஆதிவராகநல்லூர், காவனூர், கீரனூர். குறிஞ்சிப்பாடி பகுதியில் கல்குணம், பூதம்பாடி, டி.வி.நல்லூர், புவனகிரி ஒன்றியத்தில் கிருஷ்ணா புரம், தலைகுளம், மருதூர், மஞ்சகொல்லை, மிராளூர், வாண்டை யான்குப்பம், சாத்தப்பாடி, பாதிரிமேடு, கீரப்பாளையம் ஒன்றியத்தில் பெருங்காலூர், முகையூர், செங்கல்மேடு, பொன்னாங்கோயில், அய்யனூர், பண்ணப்பட்டு, விளா கம், விருதாச்சலம் வட்டத்தில் முகந்த நல்லூர், சாத்துக்குடல், இள மங்கலம், அழிச்சிகுடி, பரவலூர், வயலூர், ராஜேந்திரபட்டினம், டிவி புத்தூர், வன்னான்குடிகாடு ஆகிய கிராமங்களில் நிலத்தில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹெக்டர் நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பயிர்களை காப்பாற்ற தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிசை வீடுகள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடு களாக மாற்றும் திட்டத்தை அம லாக்கி குடிசை இல்லா மாவட்ட மாக மாற்ற வேண்டும். நீர்நிலை, சாலை புறம்போக்கில் குடி யிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கி மழைக் காலம் முடிந்த பிறகு அப்புறப்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகள், தரைப்பாலங்கள் சேதம் அடைந்துள்ளது. உடனடியாக சேத மடைந்த சாலைகள் தரைப்பாலங்களை சீரமைக்க வேண்டும். மழைநீர் புகுந்துள்ள வீடுகளுக்கு அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்களை வழங்க வேண்டும். முகாம்களில் தங்கி யுள்ளவர்ளுக்கு மூன்று வேலையும் உணவளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
10 லட்சம் நிவாரணம்
உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்க வேண்டும். தண்ணீர் புகுந்த வீடுகளுக்கு, இடிந்த வீடுகளுக்கு, காங்கிரீட் வீடு களுக்கு அரசு அறிவித்த நிவா ரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பயிர் பாதிப்புகள் குறித்து வேளாண்துறை, தோட்டகலைத்துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் இரு மல், காய்ச்சல், தலைவலி, டெங்கு காய்ச்சல், டைப்பாய்டு உள்ளிட்ட நோய்கள் பரவி வரு கிறது. எனவே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மருத்துவ மனைகளிலும் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடமாடும் மருத்துவக் குழுக்களை அமைத்து பரி சோதனை மேற்கொள்ள வேண்டும். பெண்ணை ஆற்று தண்ணீரை மலட்டாற்றுக்கு திருப்பிவிட அரசூரில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சி. தண்ணீரை மழைகாலங்களில் திறந்துவிடாமல், சீராக விவசாயத்திருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வடிகால் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். அருவாமூக்கு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.