districts

img

சுற்றுச்சூழலை பாதுகாக்க ஓசூர் மேயர் வேண்டுகோள்

ஓசூர், ஜூன் 3- சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் ஓசூரில் சமூக ஆர்வலர் நரசிம்மன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா பேசுகையில், “வருங்கால சந்ததியினரையும், உலகத்தையும், நம்மையும் பாதுகாக்க சுற்றுச்சூழல் பாது காப்பு மிகவும் அவசியமானது” என்றார். கருங்கல் குவாரி, கிரானைட் தொழில் செய்பவர்கள் அரசின் சட்டங்களை முறை யாக பின்பற்றினால் சுற்றுச்சூழல் பாதிப்பு பெரும்பகுதி தவிர்க்கப்படும் என்றும் மியாவாக்கி காடுகள் போல் ஓசூரில் மிக அதிகப்படியான மரங்கள் நட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சாலைகளில் வாகனங்கள், பேருந்துகள், கார்களில் செலபவர்கள் விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள லாரி, டிப்பர்களில் எம் சேண்ட், ஜல்லி, சிமெண்ட், மணல் எடுத்துச் செல்லும்போது முறையாக மூடி எடுத்துச் செல்ல வேண்டும் அறிவுறுத்தினார். ஓசூர் வட்டத்தில் இந்த ஆண்டுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவேண்டும். அதற்கு தேவையான உதவிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்துகொடுக்கும் என்றும் தெரிவித்தார். கனிமவள மாவட்ட அலுவலர் பொன்னுமணி, கிரஷர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சம்பங்கி, பொருளாளர் ஆனந்த், சங்க நிர்வாகி சத்தியமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.