districts

img

செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி மருத்துவமனையில் இலவச முகாம்

ஓசூர்,நவ.19- ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அரிமா சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாமை போச்சம்பள்ளி ஸ்ரீவெங்கடேஸ்வரா கிளினிக்கில் நடத்தியது. மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை தலைமை வகித்தார்.  செயின்ட் பீட்டர்ஸ்  அறங்காவலர் மருத்துவர் லாசியா முன்னிலையில், ஓசூர் சாராட்சியர் சரண்யா இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இயக்குநர் மருத்துவர் ராஜா முத்தையா, கல்லூரி மருத்துவ அலுவலர் மருத்துவர் பார்வதி, மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் கல்லூரி மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.