districts

img

ஒட்டன்சத்திரம் அருகே தனியார் கல்லூரி மாடியிலிருந்து தவறி விழுந்த தலித் மாணவி சிகிச்சை பலனின்றி பலி சிபிசிஐடி விசாரணை கோரி மாதர் சங்கம் மறியல்

ஒட்டன்சத்திரம், பிப்.27-  ஒட்டன்சத்திரம் அருகே கல்லூரி யில் மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி ஜன நாயக மாதர் சங் கத்தினர் மறியல் நடத்தினர்.  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள கேதையுறும்பு ஊராட்சி பழை யபட்டியைச் சேர்ந்தவர் கன்னி யப்பன் - பழனியம்மாள் மகள் கார்த்திகாஜோதி(வயது 18) .இவர் ரெட்டியார்சத்தரம் அருகே உள்ள செம்மடைப்பட்டியில் சக்தி என்ற தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 21 ஆம் தேதி காலை கல்லூரி வளாகத்தில் உள்ள 3 ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடன் கல்லூரி நிர்வாகத்தினர்  படுகாயத்துடன் உயிருக்கு போரா டிய மாணவி கார்த்திகாஜோதியை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் மருத்  துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 26 அன்று ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற மாணவி கார்த்திகாஜோதி சிகிச்சை பல னின்றி இறந்தார். இதற்கிடையில் கார்த்திகா ஜோதியின் பெற்றோர் மற்றும் உற வினர்களை கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பேசிக்கொண்டிருக்கும் போதே  இறந்த மாணவி கார்த்திகாஜோதி யின் உடலை கல்லூரி நிர்வாகத்தி னர் பெற்றோருக்கு தெரியாமல்  திண்டுக்கல் அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்கு ஆம்புலன்சு மூலம் அனுப்பிவைத்தனர்.

கல்லூரி, தனியார் மருத்துவமனைக்கு நேரில் வந்து நீதிபதி விசாரணை 
சம்பவம் நடந்த பிப்ரவரி 21 ஆம் தேதியன்று ஒட்டன்சத்திரம் குற்றவியியல் விரைவு நீதிபதி (பொறுப்பு) செல்வமகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் கல்லூரிக்கும், தனியார் மருத்துவமனைக்கும் நேரில் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவை செய்தியாளர்களுக்கே தெரிவிக்க மறுத்துவிட்டனர்.கல்லூரி மாணவி மாடியிலிருந்து தவறி விழுந்த அன்றே இந்த செய்தி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் வரக் கூடாது என்பதற்காக கல்லூரி நிர்வாகம் கவனத்தோடு இருந் தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


உறவினர்கள் மறியல்
இதனால் கோபமடைந்த மாணவி யின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒட்டன்சத்திரத்திரத்தில் தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  போலீசார் மறியல் செய்தவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி திண்டுக்  கல் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். இறந்த மாணவியின் உடல் ஒட் டன்சத்திரத்தில் இருந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ப தால் ஒட்டன்சத்திரம் போலீசார் மாணவி கார்த்திகாஜோதியின் உடலை ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் இருந்து மீட்டு  திண்டுக்கல் அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மாதர் சங்கம் மறியல்
ஒட்டன்சத்திரம் சக்தி நர்சிங் கல்லூரியில் மாடியிலிருந்து விழுந்த முதலாமாண்டு மாணவி கார்த்திகா ஜோதியின் மரணத்திற்கு நீதி கேட்  டும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி  விசாரிக்க வேண்டும் என்று வலியு றுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மாணவியின் மரணத்திற்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலி யுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மருத்துவக்கல்லுர்ரி முன்பாக மாநி லச்செயலாளர் ஜி.ராணி மற்றும் ஆர். வனஜா ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. மாவட்ட நிர்வாகிகள் தங்க மணி, சுமதி, நகரச்செயலாளர் ராஜேஸ் வரி, பாக்கியம், பொன்மதி உன் னிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து அங்கு வந்த திண்டுக்கல் கோட்டாட்சியரிடம் மனுக்கொடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி யளித்தார். உயிரிழந்த கார்த்திகா ஜோதி தலித் சமூகத்தைச் சேர்ந்த வர். கார்த்திகா ஜோதி உடல் வைக்கப்  பட்டிருந்த பிணவறைக்கு சிபிஎம்  மாநிலச்செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் சென்றனர். கோட்டாட்சியர் மற்றும் காவலத்துறை அதிகாரிகளிடம் உடற்கூராய்வு எத்தனை டாக்  டர்களைக் கொண்டு நடத்தப்படு கிறது. அதில் பெண் மருத்துவர் இருக்கிறரா? என்று கே.பாலபாரதி கோட்டாட்சியரிடம் கேட்டார். மேலும் உடற்கூராய்வு நடைபெறு வதை வீடியோ மூலம் பதிவு செய்ய  வேண்டும் என்று கேட்டுக்கொள் ளப்பட்டது.  பெற்றோரின் சம்மதம் இல்லா மல் எப்படி அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்கிறீர்கள். இது வன்மையான கண்டனத்திற்குரியது என்று சிபிஎம் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். சக்தி கல்லூரி யில் இதுவரை பல மாணவிகள் மர்ம மான முறையில் இறந்துள்ளனர். எனவே அந்த கல்லூரியின் உரி மத்தை ரத்து செய்ய வேண்டும். என்று தமிழக அரசுக்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.