districts

img

7 ஆண்டுகளாக உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத போக்கு ஓய்வுபெற்ற பள்ளி -கல்லூரி ஆசிரியர்கள் கண்டனப் போராட்டம்

திண்டுக்கல், ஜுலை 12- உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்கா மல் 97 தனியார் பள்ளி ஆசிரியர் களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கா மல் இழுத்தடிக்கும் விருதுநகர், சிவ காசி கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரி யர் நலச்சங்கம் கண்டனம் தெரிவித் துள்ளது.  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத் தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். 70 வயதான ஓய்வூதியர் களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும். 3 சதவீத  அகவிலைப்படியை உடனே வழங்க  வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர் களுக்கு மறு நிர்ணயம் செய்திட பணிப் பதிவேடுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி  கல்லுரி ஆசிரியர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாநிலப் பொதுச்செய லாளர் எஸ்.பிரபாகரன் செய்தியாளர் களிடம் கூறுகையில் , திமுக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி 70 வயது டைய ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்குவதாக சொன்தை நிறைவேற்றாமல் உள்ளது. மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் ஓய்வூ தியர்கள் மருத்துவ சிகிச்சை செய்து விட்டு அப்பணத்தை திருப்பி வழங்க விண்ணப்பித்து உள்ளனர். அந்த பணம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. ஓய்வூதியர் இறந்த பிறகு அவ ரது குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்  டிய குடும்ப நல நிதி கேட்டு விண்ணப்  பித்து 2 ஆண்டுகளாக வழங்கப்படா மல் உள்ளது.  மேலும் கடந்த 13.3.2015 அன்று நீதி மன்ற உத்தரவின்படி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய சிறப்பு ஓய்வூதியம் தேனி, மதுரை, நெல்லை மாவட்டங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

ஆனால் விருதுநகர், சிவ காசி கல்வி மாவட்டத்தில் 2000, 2005 இல் ஓய்வுபெற்ற 97 ஆசிரியர்களுக்கு நீதி மன்ற உத்தரவை மதிக்காமல் கடந்த  7 ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்கா மல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்க வில்லை. இதுகுறித்து பல முறை  கோரிக்கை வைத்தும் வழங்கப்படா மல் உள்ளது. இதற்கு தமிழ்நாடு முதல்  வர் தீர்வுகாண வேண்டும் என்று தெரி வித்தார்.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலை வர் சுந்தரம் தலைமை வகித்தார்.  மாவட்டச்செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் பொன்ராஜ் ஆகியோர் பேசினர். தோழமைச் சங்கங்கள் சார்  பாக எஸ்.எம்.ஜெயசீலன், எம்.எல்.கேச வன், ஜேம்ஸ்கஸ்பர்ராஜ், ராஜாராம் ஆகியோர் ஆதரித்துப் பேசினர். 

விருதுநகர் 
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலை வர் கா.சிவபெருமான் தலைமையேற் றார். மாவட்ட செயலாளர் சஞ்சீவிப்  பாண்டியன் முன்னிலை வகித்தார். துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஸ்ரீராமன், போராட் டத்தை ஆதரித்து ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சங்கத்தின் சந்திரராஜன் பேசி னார். முடிவில் மாநில துணைத் தலைவர் ச.தங்கவேல் கண்டன உரையாற்றி னார். பலர் கலந்துகொண்டனர்.