திண்டுக்கல், ஜுன் 24- திண்டுக்கல்லில் கரூர் திண் டுக்கல் சாலையில் அமைக்கப்பட இருந்த ரயில் சுரங்கப்பாதை பாலப்பணிகளை உடனே நிறை வேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வெள்ளியன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கல்லறைத்தோட்டம் அருகில் நடைபெற்ற இந்த உண்ணாவிர தத்திற்கு நகரச் செயலாளர் அரபு முகமது தலைமை வகித்தார். ஒன்றி யச்செயலாளர் சரத்குமார் வர வேற்றார். மாநிலக்குழு உறுப்பி னர் என்.பாண்டி துவக்கவுரை யாற்றினார். மாநிலச்செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி நிறை வுரையாற்றினார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் கே.பிரபா கரன், ஜி.ராணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வ.கல்யாண சுந்தரம், ஆஸாத், அஜாய்கோஷ், கே.ஆர்.பாலாஜி, முகேஷ், ஒன்றி யக் கவுன்சிலர்கள் செல்வநாயகம், ஜீவாநந்தினி, மாமன்ற உறுப்பினர் ஜோதிபாசு மற்றும் நகர்க்குழு ஒன் றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.