தருமபுரி, செப்.14-
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அரூர் பேருந்து நிலையத்தில் மக்கள் விசா ரணை மன்றம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரூர் பேருந்து நிலையத்தில் மக்கள் விசாரணை மன்றம் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.குமார் தலைமை வகித்தார். இதில், கொரோனா நோயிலிருந்து மக்களைக் காக்கத் தவறியது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மூலம் மக்களை வாட்டி வதைப்பது. பணமாக்கல் திட்டம் என்ற பெயரால் பொதுத்துறை நிறுவனங்களைத் தனி யார் மயமாக்குவது.
புதிய வேளாண் சட்டங்கள் என்ற பெயரால் விவசா யத்தைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காவு கொடுப்பது போன்ற குற்றச் சாட்டுகளை முன்வைத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், ஒன்றியச் செயலாளர் ஆர்.மல்லிகா, ஒன் றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. கோவிந்தன், கே.என்.ஏழுமலை, ஈ.கே.முருகன் ஆகியோர் உரையாற்றினர்.
இதையடுத்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் அ.குமார், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் கா.சி.தமிழ்க் ்குமரன், விசிக தொகுதி துணைச் செய லாளர் பெ.கேசவன் ஆகியோர் மக்கள் நீதிபதிகளாக இருந்து மோடி அரசின் குற்றங்களுக்கு தீர்ப்பு வழங் கினர். இதில், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.வி.மாது, சி.வேலாயுதம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.ஆறு முகம், ஏ.நேரு, சி.பழனி, டி.வேடி யப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.