அன்னூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய ரத்ததான முகாமில் இளைஞர்கள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர்.
கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட ஏ.எம் காலனியில் உள்ள சிவகாமி பள்ளி வளாகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பொகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை இணைந்து இரண்டாம் ஆண்டு ரத்ததான முகாம் தோழர் சீதாராம் யெச்சூரி நினைவாக ஞாயிறன்று நடத்தப்பட்டது.
ரத்ததான முகாமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அர்ஜுன் கொடியேற்றி துவக்கி வைத்தார் முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினார். ஒன்றிய குழு செயலாளர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் விமல் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் முகாமில் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர்.
முகாமில் சேகரிக்கப்பட்ட 45 யூனிட் ரத்தம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.