கோவை, நவ.15- யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு, சுய தொழில் துவங்க இயந்திரங்கள் வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க புகார் அளித்தனர். கோவை இருகூரை தலைமையிட மாக கொண்டு சி.டபிள்யு.டி.எஸ் (CW DS) என்ற அமைப்பை சரளாதேவி என்பவர் நடத்தி வந்துள்ளார். இவர் தனியாக சர்வலட்சுமி யூடியூப் சேனல் நடத்தி வருவதுடன், சி.டபிள்யு.டி.எஸ் அமைப்பில் சேர்வது தொடர்பாகவும் வீடியோ வெளிட்டு, அதற்கு தனியாக கட்டணம் வசூல் செய்து வந்துள்ளார். அந்த வீடியோக்களில் தங்களது அமைப்பின் மூலம் நாப்கின், கற்பூரம், மண்புழு உரம் தயாரித்தல் உட்பட 20க்கும் மேற்பட்ட சுயதொழில்கள் துவங்க இயந்திரங்கள் வாங்கி தரு வதாகவும், அந்த இயந்திரங்களில் தயாரிக்கப்படும் பொருட்களையும் தாங்களே வாங்கி கொள்வதாகவும் யூடியூப் சேனலில் வீடியோ வெளி யிட்டார். இதைத்தொடர்ந்து, சுயதொழில் செய்ய வேண்டும் என விருப்பத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராள மான பொதுமக்கள் ஆன்லைன் மூலம் சரளாதேவிக்கு பணம் அனுப்பியுள்ள னர். இச்சூழலில், சரளாதேவி இரு கூரில் இருந்த அலுவலகத்தை காலி செய்து விட்டு தீடீரென தலைமறை வாகியுள்ளார். அவர் கொடுத்திருந்த செல்போன் எண்களிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இத னால் பணம் அனுப்பியவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புகார் மனு அளித்தனர். அம் மனுவில் சரளாதேவியை நம்பி தமி ழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஏமாந்திருப்பதாகவும், அவரிடம் கொடுத்த பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் தெரி வித்துள்ளனர்.