சேலம், ஜூலை 6- வறுமை கோட்டுக்கு கீழ் பட்டியலில் செல் வந்தர்களை சேர்த்துவிட்டு, உண்மை பய னாளிகளை புறக்கணிக்கும் ஊராட்சி நிர்வா கத்தை கண்டித்து, தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மூலக்காடு ஊராட்சி. இந்த ஊராட்சியில் 500க்கும் மேற் பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை செய்து வந்தனர். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னு ரிமை வழங்கும் திட்டம் தற்போது செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூலக் காடு ஊராட்சியில் செல்வந்தர்கள், அரசு மற் றும் தனியார் வேலையில் இருப்பவர்களின் குடும்பத்தினரை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர் களுக்கு வேலை வாய்ப்பு அட்டை வழங்கப் பட்டுள்ளது. ஆனால், உண்மையிலேயே வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தங்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படவில்லை. செல்வந்தர் களை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் சேர்த்த ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். மேட்டூர் - மைசூர் சாலையில் விராலிகாடு அருகே இந்த மறியல் நடைபெற்றது. இத னால் மேட்டூர் - மைசூர் சாலை போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இதனையறிந்த மேட் டூர் காவல் துணை கண்காணிப்பாளர் மாரி முத்து கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவ லர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் அரசு பணியில் இருப்பவர்களை சேர்த்தது குறித்து விசாரணை நடத்துவதாகவும், உண்மையான பயனாளிகளை இணைக்க நடவடிக்கை மேற் கொள்வதாகவும் உறுதி அளித்தனர். இதனை யடுத்து போராட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர்.
தருமபுரி
இதேபோன்று தருமபுரி மாவட்டம், தொட் டம்பட்டி ஊராட்சிக்குபட்ட நாச்சனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்து வரு கின்றனர். இவர்களுக்கு கடந்த நான்கு மாதங் களாக ரூ.100 சம்பளம் வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் மற்றும் அரசு அதிகாரி களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த 150க்கும் மேற் பட்ட பெண் தொழிலாளர்கள் அரூர் - சேலம் நான்கு வழிச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தொட் டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ மாணிக்கம் சம்பவ இடத்திற்கு வந்து போராட் டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முறையான கூலி வழங்குவதாக உறுதியளித்தின் அடிப்படையில், பெண் தொழி லாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.