districts

img

தரிசு நிலத்தை பண்படுத்தி காய்கறி சாகுபடி கிராம ஊராட்சி நிர்வாகம் அசத்தல்

கோவை, செப்.8 - சுமார் இரண்டரை ஏக்கர் தரிசு  நிலத்தை பண்படுத்தி, வெங்காயம்  உள்ளிட்ட காய்கறிகளை ஊராட்சி நிர் வாகம் முன்முயற்சி எடுத்து சாகுபடி  செய்யப்பட்டு வருவது பொதுமக்க ளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள் ளது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த  கருமத்தம்பட்டி அருகே கிட்டாம்பாளை யம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 10  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி தமிழக அர சிடம் சிறந்த ஊராட்சி என விருது வாங் கிய இந்த ஊராட்சியில் சுயேச்சையாக  போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரசே கர் என்பவர் தலைவராக இருந்து வருகி றார்.  புதுமையான திட்டங்களை முன்னெ டுப்பதில் ஆர்வம் காட்டி வரும் ஊராட் சித் தலைவர், தரிசு நிலங்களை பண்ப டுத்தி விவசாயம் செய்வதுடன், இதில்,  கிடைக்கும் காய்கறிகளை பொதுமக்க ளுக்கு மலிவு விலையில் விற்பனை செய்து அந்த தொகையை ஊராட்சி  நிர்வாகத்தின் வரவு கணக்கில் வைத்து  வருகிறார். ஓடை கற்கள் நிறைந்த இரண் டரை ஏக்கர் தரிசு நிலத்தை தேர்ந்தெ டுத்து அதனை விவசாயத்துக்கு ஏற்ற  வகையில் தேசிய ஊரக வேலை திட்டப்  பணியாளர்கள் உதவியுடன் பண்ப டுத்தி எலுமிச்சை செடிகளை நடவு செய் துள்ளார். இதில், ஊடுபயிராக வெங்கா யம், மிளகாய், வெண்டைக்காய் உள் ளிட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ளார்.சாகுபடி செய்யப்படும் காய்கறிகளை கிராம மக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்வதுடன், அதில், கிடைக் கும் வருமானத்தை ஊராட்சி நிர்வாகத் தின் கணக்கில் வரவு வைத்து வரு கிறார். இது குறித்து கிட்டாம் பாளையம்  ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், பெரும்பாலும் ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மரக் கன்றுகளை நடவு செய்து பசுமை வனம்  அமைப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில், நாங்களும் பத்தாயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து பராம ரித்து வருகிறோம். எனினும் விவசா யத்தை ஊக்குவிக்கும் வகையில்  ஊராட்சிக்கு சொந்தமான தரிசு நிலங் களை பண்படுத்தி தற்போது முப்போக மும் காய்கறிகளை சாகுபடி செய்து வரு கிறோம். கடந்த முறை காய்கறிகள் விற் பனையில் கிடைத்த லாபம் 45 ஆயிரம் ரூபாயை ஊராட்சி நிர்வாகத்தின் கணக் கில் வரவு வைத்திருக்கிறோம். தற் போது மூன்றாவது போகம் நடவு செய் துள்ள வெங்காயத்தை அறுவடை செய்து வருகிறோம். இந்த திட்டம் எங்க ளது கிராம மக்களிடையே நல்ல வர வேற்பை பெற்றுள்ளது. எதிர்காலத்தில் எஞ்சியுள்ள தரிசு நிலங்களில் விவசா யம் செய்து காய்கறி உற்பத்தியில் தன் னிறைவு பெற்ற கிராமமாக மாற்ற திட்ட மிட்டு உள்ளோம். என்றார்.