சென்னை,மே 5-தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில்மழை பெய்ய வாய்ப்பு உள் ளது. ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசக் கூடும்.கடந்த 24 மணி நேரத்தில்வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 14 சென்டி மீட்டர், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 7 சென்டி மீட்டர் திருத்தணியில் 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.