districts

img

மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்

கும்பகோணம், ஏப்.25-2019-20 கல்வியாண்டிற்கு மாணவ-மாணவியர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு செயல்படும் இந்நேரத்தில் தனியார் பள்ளிகளின் விளம்பர மோகத்தில் சிக்கிவிடாமல் இருப்பதற்காக அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வியை போதிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு வழி மொழிகளிலும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம், ஆரியச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பள்ளி கோடை விடுமுறை என்றும்பார்க்காமல் தலைமை ஆசிரியை ந.மேகலா தலைமையில் அப்பள்ளியின்ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று தீவிரமாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தனியார் பள்ளிவிளம்பர மோகத்தில் இருந்து விடுபட்டு பெற்றோர்கள் பொருளாதாரத்திலும் சீரடைய உதவியாக இருக்கும். மாணவர்களும் நிலையான கல்வி பயில்வார்கள் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.