கோவை, அக்.9- கோவை மாநகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரி யார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடு பட்டனர். கோவை மாவட்டம், ஆர்எஸ்புரம் பகுதியி லுள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி நடப்பதாக புகைப்படம், வீடியோ காட்சிகள் ஞாயிறன்று சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த மாநக ராட்சி ஆணையாளர், கோவை மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட வில்லை என தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி வளாகத்தில் மதம் சார்பாக பயிற்சி நடை பெறுவது குறித்து உரிய விசாரணை நடத்த, அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் ஆணையா ளர் தெரிவித்துள்ளார். இதனிடையே மாநகராட்சி பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடைபெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தந்தை பெரியார் திராவிட கழ கத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டி ணன் தலைமையில் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கு.ராம கிருட்டிணன் கூறுகையில், மாநகராட்சி பள்ளி யில் ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு அனுமதி அளிக் கப்பட்டுள்ளது. இதை அனுமதித்த அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி பொது இடங்களிலோ, மாநகராட்சி பள்ளியிலோ இதுபோன்ற பயிற்சிகளுக்கு அனுமதிக்கக் கூடாது. நாங்கள் இதை வலியுறுத்தி பலமுறை போராட்டம் நடத்தியுள்ளோம். ஆனாலும், மாநகராட்சி பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் ஊடு ருவல்கள் உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பி னர், சிறுவர்களை அமர வைத்து வகுப்புகள் நடத்துவது வீடியோக்களில் தெரிகிறது. இது சட்டவிரோதம். தற்போது சிக்கிக்கொண்ட பின்பு தூய்மை செய்தோம் என சமா ளிக்கின்றனர். அதிகாரிகள் எந்த அடிப்படையில் இதற்கு அனுமதித்தனர். இன்று (ஞாயிறன்று) நடை பெற்றது சாகா பயிற்சி தான், என்றார். இதற்கி டையே ஆர்எஸ்புரம் காவல் ஆய்வாளர் தலை மையில் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.