districts

img

புதிய சாலையின் அகலத்தை குறைப்பதா?

உதகை, டிச.27- ஆனைக்கட்டி, சிறியூர் பழங்குடியின கிராமங்களுக்கு புதிய சாலை அமைக்கும் திட்டத்தில், சாலையின் அக லத்தை குறைப்பதற்கு பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை தாலுகாவிற்குட்பட்ட சிறியூர், ஆனைக்கட்டி  ஆகிய பழங்குடியின கிராமங்களில் இருளர் பழங்குடியினத்தை சார்ந்த 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடியின மக்களுக்காக 1983 ஆம்  ஆண்டு வாழைத்தோட்டம் சந்திப்பு முதல் சிறியூர் வரை 4  மீட்டர் அகலத்தில் 21 கிலோ மீட்டருக்கு தார் சாலை அமைக் கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு மேலாக அந்த சாலை சீர மைக்கப்படாமல் மிகவும் மோசமாக இருந்தது. இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்கிற பழங்குடியின மக்க ளின் தொடர் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு ரூ.14 கோடி  ஒதுக்கீடு செய்தது. அதில், 3.75 மீட்டர் அகலத்தில் தார்ச்  சாலை அமைக்க, டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில், 2.80 மீட்டர் அகலத்திற்கு மட்டுமே சாலை அமைக்க  வேண்டும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர். வனத் துறை உத்தரவுப்படி ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொண்ட தால், ஆவேசமடைந்த ஆனைக்கட்டி மற்றும் சிறியூர் கிரா மத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வியாழனன்று சாலைப் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், தமிழக அரசு நிர்ணயித்துள்ள 3.75 மீட்டர் அக லத்தில் சாலையை அமைக்க வேண்டும் என்றும் அகலத்தை குறைத்து சாலை அமைக்க விடமாட்டோம் என்றும் கூறி  பணியை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து சாலைப் பணி  நிறுத்தப்பட்ட நிலையில் விரைவில் மாவட்ட ஆட்சியரை சந் தித்து முறையிட உள்ளதாகவும்,  சாலையை ஏற்கனவே உள்ளது போல அமைக்க வேண்டும் என்றும் இல்லாவிட் டால் 7 ஆதிவாசி கிராம மக்கள் ஒன்றிணைந்து பெரிய அள வில் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர்.